ஏப்ரல் 27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டின் 117ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 118ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.
- 1296 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.
- 1521 - நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
- 1522 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும் சுவிட்சர்லாந்துப் படையினரை ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
- 1565 - பிலிப்பீன்சின் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.
- 1667 - குருடரான ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
- 1813 - 1812 போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர் யோர்க்கை கைப்பற்றினர்.
- 1840 - லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
- 1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
- 1904 - அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.
- 1909 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: கடைசி நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.
- 1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
- 1960 - பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த டோகோ விடுதலை அடைந்தது.
- 1961 - சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1967 - கனடாவின் மொன்ட்ரியால் நகரில் எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.
- 1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
- 1981 - Xerox PARC முதன் முறையாக கணனி mouse ஐ அறிமுகப்படுத்தியது.
- 1992 - சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1993 - காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1994 - தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
- 2001 - தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
- 2002 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
- 2007 - எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1723 - பிலிப்பு தெ மெல்லோ, கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர் (இ. 1790)
- 1902 - கந்தமுருகேசனார், ஈழத்துப் புலவர் (இ. 1965)
- 1942 - வலேரி பொல்யாக்கொவ், ரஷ்ய விண்வெளி வீரர்
[தொகு] இறப்புகள்
- 1521 - பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கேய மாலுமி (பி. 1480)
[தொகு] சிறப்பு நாள்
- சியேரா லியோனி - விடுதலை நாள் (1961)
- டோகோ - விடுதலை நாள் (1960)