மார்ச் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 4 கிரிகோரியன் ஆண்டின் 63ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 64ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1275 - சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
- 1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
- 1493 - கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
- 1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.
- 1665 - இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
- 1793 - பிரெஞ்சுப் படைகள் நெதர்லாந்தின் கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
- 1810 - பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து விரட்டப்பட்டது.
- 1813 - நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
- 1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
- 1877 - பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் ஸுபான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
- 1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
- 1894 - ஷங்காயில் ஏற்பட்ட பெரும் தீயில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
- 1899 - குயீன்ஸ்லாந்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1908 - ஒகைய்யோவில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
- 1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.
- 1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
- 1945 - எலிசபெத் இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.
- 1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
- 1977 - ருமேனியா தலைநகர் புகாறெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
- 1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
- 2001 - லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
- 2001 - போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
- 2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1938 - அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் (இ. 2006)
[தொகு] இறப்புக்கள்
- 1193 - சலாடீன், துருக்கிய சுல்தான் (பி. 1137)
- 1941 - லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1858)
- 1952 - சார்ள்ஸ் ஷெரிங்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1857)
- 2005 - கலைச்செல்வன், உயிர்நிழல் ஆசிரியர்