ஜனவரி 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜனவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
ஜனவரி 3 கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 (நெட்டாண்டுகளில் 363) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1431 - ஜோன் ஆஃப் ஆர்க் பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
- 1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.
- 1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
- 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.
- 1859 - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- 1888 - 91 சமீ முறிவுத் தொலைக்காட்டி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது.
- 1921 - துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
- 1925 - இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.
- 1932 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
- 1956 - ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
- 1958 - மேற்கிந்தியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
- 1959 - சே குவேரா கியூபாவின் ஹவானா நகரை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றினார்.
- 1961 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
- 1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.
- 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
- 1990 - பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
- 1994 - ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
- 2004 - எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1740 - கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)
- 1956 - மெல் கிப்சன், அவுஸ்ரேலிய நடிகர்
- 1969 - மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர்
[தொகு] இறப்புகள்
- 2005 - ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936)