மே 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 21 கிரிகோரியன் ஆண்டின் 141ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 142ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 224 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 996 - புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
- 1502 - போர்த்துக்கீச மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
- 1792 - ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
- 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
- 1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
- 1864 - ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
- 1871 - பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிஸ் கம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20,000 கொம்ம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 1894 - 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலன் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
- 1904 - பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
- 1917 - அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1991 - முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
- 1991 - எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1994 - யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.
- 1996 - தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1998 - 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
- 2003 - வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- கிமு 427 - பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் (இ. கிமு 347)
- 1921 - அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இ. 1989)
- 1954 - டி. பி. எஸ். ஜெயராஜ், ஊடகவியலாளர்
- 1960 - மோகன்லால், தென்னிந்திய நடிகர்
- 1972 - நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
[தொகு] இறப்புகள்
- 1991 - ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1944)
- 2000 - பார்பரா கார்ட்லண்ட், ஆங்கில நாவலாசிரியை (பி. 1901)
[தொகு] சிறப்பு நாள்
- சிலி - கடற்படையினர் நாள்