நவம்பர் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 7 கிரிகோரியன் ஆண்டின் 311வது நாளாகும். நெட்டாண்டுகளில் 312வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தான்.
- 1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) என்ற இதழ் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
- 1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒஹாயோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1917 - அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
- 1917 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றின.
- 1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7.542 பேர் (20% மக்கள் தொகை) வருட முடிவிற்குள் இறந்தனர்.
- 1931 - சீன சோவியத் குடியரசு அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: "ஆர்மேனியா" என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.
- 1941 - நாசி ஜேர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.
- 1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.
- 1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1867 - மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)
- 1879 - லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியாளர், (இ. 1940).
- 1888 - சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).
- 1913 - அல்பேர்ட் காம்யு - நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், (இ. 1960).
- 1954 - கமல்ஹாசன், தமிழ் நடிகர்.
[தொகு] இறப்புகள்
- 1862 - பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்
- 1947 - கோ. நடேசையர், இலங்கையின் மலையகப் பத்திரிகையாளர்
- 1951 - என். சி. வசந்தகோகிலம், கருநாடக இசைக் கலைஞர்.
- 1993 - திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).
- 2000 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).