ஜூலை 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 21 கிரிகோரியன் ஆண்டின் 202வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 203வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 163 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1774 - ரஷ்யாவும் துருக்கியும் தமது ஏழு வருடப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
- 1831] - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் Léopold I முடி சூடிய நாள்.
- 1954 - ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1969 - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
- 1972 - வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் இடம்பெற்ற 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் படுகாயமடைந்தனர்.
- 1977 - லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையில் 4 நாள் போர் ஆரம்பமானது.
- 2007 - ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசி நூல் வெளிவந்தது.
[தொகு] பிறப்புகள்
- 1899 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
[தொகு] இறப்புகள்
- 1899 - சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பி. 1853)
- 2001 - சிவாஜி கணேசன், புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927
[தொகு] சிறப்பு நாள்
- பெல்ஜியம் - தேசிய நாள்
- பொலீவியா - மாவீரர் நாள்
- குவாம் - விடுதலை நாள் (1944)
- சிங்கப்பூர் - Racial Harmony Day