ஜூலை 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 17 கிரிகோரியன் ஆண்டின் 198வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 199வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1791 - பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் பெண்கள், குழந்தைகள் உட்பட 1500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.
- 1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- 1911 - தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக யாழ்ப்பாணத்தில் The Jaffna Matrimonial Rights and Inheritance ordinance அமுலுக்கு வந்தது.
- 1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் சார் மன்னர் இரண்டாம் நிக்கலாசும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.
- 1944 - முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சோவியத் தலைவர்கள் உலகப்போர் தொடர்பான கடைசி உச்சி மாநாட்டை பொட்ஸ்டாமில் ஆரம்பித்தனர்.
- 1955 - டிஸ்னிலான்ட் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது.
- 1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.
- 1976 - மாண்ட்ரீல், கனடாவில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- 1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.
- 1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்துக் கிண்ணத்தை வென்றது.
- 1996 - நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1954 - ஏங்கலா மெர்கல், ஜெர்மனி நாட்டு அரசியல்வாதி
- 1971 - சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)
- 1977 - மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி
[தொகு] இறப்புகள்
- 1918 - ரசியாவின் சார் இரண்டாம் நிக்கலாஸ் (பி. 1868) குடும்பம்
- 1972 - எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர், (பி. 1901)
[தொகு] சிறப்பு நாள்
- தென் கொரியா - அரசியலமைப்பு நாள்