ஏங்கலா மெர்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏங்கலா டாரத்தி மெர்கல் (Angela Dorothea Merkel) (பிறப்பு ஜூலை 17, 1954) ஜெர்மன் நாட்டு அரசியல்வாதி ஆவார். கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் (Christian Democratic Union) உறுப்பினரான இவர், அக்கட்சியின் சார்பாக 2005 ஜெர்மனி கூட்டமைப்பு தேர்தல்களில் வேந்தர் (Chancellor) பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும் தேர்தல் முடிவுகள் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை தராத நிலையில், ஜெர்மன் சமூகக் குடியரசுக் கட்சியுடன் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்த அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், மெர்கலை ஜெர்மனியின் அடுத்த வேந்தராக பதவியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மெர்கல் ஜெர்மனியின் முதல் பெண் வேந்தராகவும் ஜெர்மனி தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணாகவும் ஆகிறார்.