ஜூலை 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 6 கிரிகோரியன் ஆண்டின் 187வது நாளாகும். நெட்டாண்டுகளில் 188வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1785 - டொலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது ஜோசப் மெயிஸ்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
- 1892 - தாதாபாய் நவ்ரோஜி பிரித்தானியப் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்த துறவி தூக்கிலிடப்பட்டார்.
- 1964 - மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1966 - மலாவி குடியரசாகியது.
- 1975 - கொமொரோஸ் (The Comoros) பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 2005 - லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1870 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
- 1946 - ஜோர்ஜ் புஷ், ஐக்கிய அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி
- 1946 - சில்வெஸ்ரர் ஸ்ரலோன், அமெரிக்கத் திரைப்பட நடிகர்
[தொகு] இறப்புகள்
- 1893 - மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1850)
- 1991 - என். ஆர். சின்னராசா, ஈழத்தின் தவில் மேதை (பி. 1934)
- 1991 - கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)
- 2002 - திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)
- 2005 - கிளோட் சைமன், நோபல் பரிசு பெற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1913)