அக்டோபர் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 6 கிரிகோரியன் ஆண்டின் 279வது நாளாகும். நெட்டாண்டுகளில் 280வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1854 - இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்ஸ்ஹெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.
- 1889 - தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்.
- 1890 - யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
- 1908 - ஆஸ்திரியா தன்னுடன் பொஸ்னியா ஹெர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.
- 1922 - முதலாம் உலகப் போர்: இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.
- 1976 - பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.
- 1976 - தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1981 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டார்.
- 1995 - சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1887 - லெ கொபூசியே, கட்டிடக் கலைஞர் (இ. 1965)
[தொகு] இறப்புகள்
- 1981 - அன்வர் சதாத், எகிப்திய ஜனாதிபதி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)