பெப்ரவரி 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 15 கிரிகோரியன் ஆண்டின் 46 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- கிமு 399 - மெய்யியலாளர் சோக்கிரட்டீஸ் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 590 - பேர்சியாவின் மன்னனாக இரண்டாம் கொஸ்ராவு முடி சூடினான்.
- 1637 - புனித ரோம் பேரரசின் மன்னனாக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினான்.
- 1898 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் கவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
- 1920 - யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
- 1946 - ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
- 1950 - சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 1961 - பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து அமெரிக்க Figure Skating வீரர்கள் உட்பட 73 பேர் கொல்லப்ப்பட்டனர்.
- 1989 - ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
- 1994 - ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
- 1996 - சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
- 1999 - குர்டிஸ்தான் தீவிரவாதத் தலைவர் அப்துல்லா ஓக்கலன் துருக்கிய இரகசியப் படைகளினால் கென்யாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
- 2005 - யூடியூப் (YouTube) ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1564 - கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1642)
- 1845 - எலீஹு ரூட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1937)
- 1861 - சார்ல்ஸ் கில்லோம், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர், (இ. 1938)
- 1873 - ஹான்ஸ் இயூலர்-செல்ப்பின், நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர், (இ. 1964)
- 1922 - டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் முன்னாள் சனாதிபதி.
- 1956 - டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாளர்.
- 1984 - மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 1973 - அழகு சுப்பிரமணியம், ஆங்கில எழுத்தாளர், இலங்கையர். (பி. 1915)
- 1988 - ரிச்சார்ட் பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1918)
- 1999 - ஹென்றி கென்டால், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1926)