Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சிங்கப்பூர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிங்கப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Republik Singapura
新加坡共和国
சிங்கப்பூர் குடியரசு
சிங்கப்பூரின் கொடி சிங்கப்பூரின் சின்னம்
குறிக்கோள்
Majulah Singapura
(மலாய் "சிங்கப்பூர் முன்னோக்கி")
நாட்டுப்பண்
முன்னேறட்டும் சிங்கப்பூர்
Location of சிங்கப்பூரின்
தலைநகரம்
பெரிய நகரம்
சிங்கப்பூர் 1
1°17′N, 103°51′E
ஆட்சி மொழி(கள்) மலாய் , ஆங்கிலம், மேண்டரின், தமிழ்
அரசு பாராளுமன்ற குடியரசு
 -  அதிபர் செல்லப்பன் இராமநாதன்
 -  பிரதமர் லீ எசிய லூங்
விடுதலை
 -  ஒருதலைபட்ச பிரகடனம் (ஐ.இ. இடமிருந்து) ஆகஸ்டு 31, 1963 
 -  அதிகாரப்பூர்வமாக ஐ.இ இடமிருந்து( மலேசியாவின் மாநிலமாக) செப்டம்பர் 16, 1963 
 -  மலேசியாவிடமிருந்து ஆகஸ்டு 9, 1965 
பரப்பளவு
 -  மொத்தம் 699 கிமீ² (190வது)
270 சது. மை 
 -  நீர் (%) 1.444
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 estimate 4,326,000 (120வது)
 -  2000 census 4,117,700 
மொ.தே.உ (கொ.ச.வே) 2006 கணிப்பீடு
 -  மொத்தம் $123.4 பில்லியன் (57வது)
 -  தலா/ஆள்வீதம் $29,900 (22வது)
ம.வ.சு (2003) 0.907 (உயர்) (25வது)
நாணயம் சிங்கப்பூர் டாலர் (SGD)
நேர வலயம் சி.சீ.நே (ஒ.ச.நே.+8)
 -  கோடை (ப.சே.நே.) இல்லை (UTC+8)
இணைய குறி .sg
தொலைபேசி +652
1. சிங்கப்பூர் ஒரு நகர நாடாகும்.
2. 02 மலேசியாவில் இருந்து அழைக்கும் போது

சிங்கப்பூர் குடியரசு (சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura; ஆங்கிலம்: The Republic of Singapore) தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன.

சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.

மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்குஆசியாவில் மிகச்சிறிய, மற்றும் உலகிலேயே மூன்றாவது மிகச்சிறிய நாடாகும். எனினும் அன்னியர் செலவாணியில் சிங்கபூரிடம் அமெரிக்க வெள்ளி 172 பில்லியன் $ உள்ளது. விடுதலைக்கு பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

[தொகு] பெயர்க்காரணம்

சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகக் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின் படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்த தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம் போல ஒரு மிருகத்தை பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாறு.

[தொகு] முந்தைய வரலாறு

சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜய சாம்ராச்சியத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.

ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் - 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் - துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

[தொகு] உலகப்போர்

தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்
தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸ்

நவீன சிங்கை நகர் 1819 ஆம் ஆண்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த தொமஸ் ஸ்டேம்ஃபர்ட் ராஃபிள்ஸினால் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகச் சேர்க்கப்பட்டது. பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் Straits Settlements இன் ஒரு பாகமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிங்கப்பூர் ஜப்பானியர்களின் ஆட்சியில் சிக்கியது. 1945 ஆம் ஆண்டில் அது மீண்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தது.

[தொகு] தற்போதைய சிங்கப்பூர்

சிங்கப்பூர் துறைமுகம்
சிங்கப்பூர் துறைமுகம்

1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி பெற்று, 1963 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1965 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து முழு சுதந்திரம் பெற்று குடியரசாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் GDP per capita ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று. சிங்கப்பூர் விடுதலை பெற்ற பிறகு அதன் தலைமை அமைச்சராக விளங்கிய லீ குவான் யூவின் சிறந்த திட்டங்களே சிங்கப்பூர் கண்ட பெரும் வளர்ச்சிக்குக் காரணம்.

[தொகு] பண்பாடு

சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.

[தொகு] மக்கள்

ஜூன் 2006 படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.48 மில்லியன். இதில் 3.6 மில்லியன் மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள்.

[தொகு] மதம்

சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 51% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தம் மற்றும் டாவோயிசம் பின்பற்றுகின்றனர். 15% மக்கள், பெரும்பாலும் சீனர்கள் மற்றும் இந்தியர்கள் கிறித்துவத்திலும், 16% மக்கள், பெரும்பாலும் மலாய் மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.

[தொகு] மொழி

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம், மந்தாரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்


உலகத்தமிழர் வாழ் நகரங்கள்|
சென்னை | மதுரை | பெங்களூர் | யாழ்ப்பாணம் |கொழும்பு | ரொறன்ரோ | சிங்கப்பூர் | கோலாலம்பூர் | லா சப்பல் - பாரிஸ் | இலண்டன்
ஏனைய மொழிகள்
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com