Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மாலைதீவுகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மாலைதீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ
மாலைதீவுகள் குடியரசு
மாலைதீவுகளின் கொடி மாலைதீவுகளின் சின்னம்
கொடி சின்னம்
நாட்டுப்பண்
கவ்மீ மீ எகுவெரிகன் மட்டி(தேச ஒற்றூமையால் நாட்டை வணங்குகிறோம்)
Location of மாலைதீவுகளின்
தலைநகரம்
பெரிய நகரம்
மாலே
4°10′N, 73°30′E
ஆட்சி மொழி(கள்) திவெயி
அரசு குடியரசு
 -  குடியரசு தலைவர் மகமூன் அப்துல் காயூம்
விடுதலை
 -  ஐ.இ. இடமிருந்து யூலை 26 1965 
பரப்பளவு
 -  மொத்தம் 298 கிமீ² (204வது)
115 சது. மை 
 -  நீர் (%) புறக்கனிக்கதக்கது
மக்கள்தொகை
 -  யூலை 2005 estimate 329,000 (176வது1)
 -  2006 census 298,842[1] 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $2.569 பில்லியன்ன் (162வது)
 -  தலா/ஆள்வீதம் $7,675 (79வது)
ம.வ.சு (2003) 0.745 (மத்திய) (96வது)
நாணயம் றவுஃபியா (MVR)
நேர வலயம் (ஒ.ச.நே.+5)
இணைய குறி .mv
தொலைபேசி +960
1 2005 ஐநாவின் மதிப்பீட்டின் அடிப்படையில்.

மாலைதீவுகள் (Maldives) அல்லது மாலத்தீவுகள் குடியரசு இந்து சமுத்திரத்தில் உள்ள பல சிறிய திவுகளாலான தீவு தேசமாகும். இது இந்தியாவின் இலட்சதீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது. மொத்தம் 26 பவழத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 100 இல் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறது. நாட்டின் பெயர் மலைத்தீவுகள் என்ற தமிழ் பதத்தின் மருவலாகும் அல்லது "மாலதிவிப" (தீவுகளின் மாலை) என்ற சமஸ்கிருத மொழி பததின் மருவலாகும். வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிப் பதத்தின் மறுவலாகும். 1153இல் இஸ்லாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது, பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துக்கேயரிடமும், 1654 நெதர்லாந்திடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப் பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐ.இ. இடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. இருப்பினும் கடந்த 38 ஆண்டுகளில் மாலைத்தீவுகள் இரண்டு அதிபர்களை மட்டுமே கண்டது. ஆனால் இப்போது அரசியல் உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெருகின்றன.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

மாலைதீவுகளின் தொல்பொருள் ஆய்வு பற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயுந் நோக்கில் இங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"(திவெயி: ހަވިއްތަ) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான காலச்சரம் மொன்றை கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயெ மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கி பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிட பொருள் தட்டுப்பாடு காரணமாக காலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய காலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டன என கருதுகின்றார்.

மாலைதீவின் வாரலாற்றின் படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்புநிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைதீவில் தங்கும் படியாயிற்று அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைதீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தான் என கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைதீவை ஆண்டார்கள் இவர்கள் தங்களை தமிழரின் வழித்தோன்றல்கள் என கோருகின்றனர்.

இஸ்லாமிய மததுக்கு மாற முன்னர் மாலைதீவினர் பௌத்த மதத்தை பின்பற்றினார்கள். மாலைதீவின் காலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்த்தது எனினும் 1887 முதல் யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1988 இல் இலங்கை தாமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைதீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி தீவை மாணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.[1][2]

2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியது.[3]

[தொகு] பொருளாதாரம்

மாலைதிவுகளின் ஆள்வித வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது இப்போதும் அது பேணப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் மீன்பிடி கைத்தொழிலும் மாலைதீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பை செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய ஆள்வீத வருமாணத்தை கொண்டது. மாலைதீவுகளின் முக்கிய வணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும்.[4].

[தொகு] மீன்பிடி

மாலைதீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் காடல் சார் துறைகளில் முக்கியமாக தங்கியுள்ளது. மீன்பிடிப்பு மக்களின் முக்கிய தொழிளாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி செய்கிறது.

1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய "டோனி" என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழினினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினது முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களை டின்னில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டது இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி பாடசாலை கல்வியில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடி கைத்தொழில், மாலைதீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிளாலர்படையில் 30% பேர் மீன்பிடிக்கைத்தொழிளில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயை கொடுக்கிறது.

[தொகு] சுற்றுலாத் துறை

தலைநகரம் மாலே
தலைநகரம் மாலே

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாக பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20% வழங்கும் சுற்றூலாத்துறை, நாட்டுக்கு கூடிய வெளிநாட்டு வருவாயை பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதளங்களுக்கு 2000 ஆம் ஆண்டு சுமார் 467,154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

[தொகு] குடிசைக் கைத்தொழில்

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ர்சியை மறைமுகமாக ஆதரித்தது. பாய், நெசவு , சிற்பம் , கயிறு திரிதல் போன்ற கைத்தொழிகள் முக்கிய வளச்சியை கண்டன.

[தொகு] அரசியல்

மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்டத்துக்குள் நடைபெருகின்றது. அதிபர் அரசின் தலைவராக பணியாற்றும் அதேவேலை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் நடைபெரும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தெரிந்தெடுக்கப் படுகிறார். எவ்வாரெனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிபடுத்த வேண்டும்.

மாலைதீவுகளின் பாரளுமன்றம் (மசிலிசு) 50 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சி முறை பாரளுமன்றமாகும். ஒரு பவழத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தெரிந்தெடுக்க்ப்படுவதோடு, மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார். மாலைதீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றதை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன.

[தொகு] நிர்வாக அலகுகள்

நாசாவின், மாலைதீவுகளின் செயற்கைக் கோள் படம்
நாசாவின், மாலைதீவுகளின் செயற்கைக் கோள் படம்

மாலைதீவுகளின் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாக பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது.[5] மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.

ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்க்ப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாக பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்கு பதில் கூறவேண்டியவர்களாவர்கள்.

[தொகு] புவியியல்

மாலைதீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 மீற்றர் மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 சதம மீட்டர் உயர்ந்த்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைதீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

டிசம்பர் 26 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக மாலைதீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கி பலர் வீடுகளை இழந்தனர். இப்போது மாலைதீவுகளின் நிலப்பட வரையுனர்கள் மாலைதீவுகளின் வரைப்படத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் ஒரு நாள் மாலைதீவுகள் முற்றாக உலக வரைப்படத்தில் இருந்து இல்லாது போய்விடும் என அஞ்ச செய்கிறது.

[தொகு] மக்கள் கணிப்பியல்

மாலைதீவுமக்கள் பல காலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார்கள். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார்கள். கிபி 12வது நூற்றாண்டில் மலே தீவுகள் கிழக்காபிரிக்கா மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினார்கள். இன்றைய மாலைதீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்காலாச்சார கலப்பு மக்களாவர்.

ஆரம்பத்தில் பௌத்தராகவிருந்த இம்மக்கள்[6] கிபி 12வது நூற்றாண்டில் சன்னி இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர். இன்று இஸ்லாம் நாட்டின் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. மாலைதீவுகளின் குடிமகனாவதற்கு இஸ்லாம் மதத்தை ஏற்பது கட்டாயமாகும்.

மாலைதீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வணிபத்துறையில் பரவலாக பாவணயில் உள்ளது, இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சிக் கண்டுவருகின்றது.

இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாக பின்பற்றபடுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் செல்வம், இஸ்லாம் மிதான பற்று போன்ற வேறும் பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தளங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்ப்படுவதில்லை.

[தொகு] காலாச்சாரம்

[தொகு] மாலைதீவுகளில் இஸ்லாம்

இந்திய வாணிப சமுதாயத்தை தவிர்த்த ஏனைய மாலைதீவினர் சன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக பாவணையில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றது. மாலைதீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.

ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமதான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேலையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாட்டுகளுடன் நேரடி தொடர்பை பல நூற்றாண்டுகளாக கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைமுறைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளது. அசுத்த ஆவிகள் பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களை பின்பற்றுகின்றார்கள்.

[தொகு] மாலைதீவுகளின் இசை

மாலைதீவுகளின் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைதீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பை தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் மலேசிய,இந்திய, கிழக்காபிரிக்க அரபு தாக்கத்தை பிரதானமாக காணலாம்.

மிக பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைத்தீவுகளில் 11ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்ததாக கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒர் நடன இசையாகும். தலைமை பாடகர் ஒருவரோடு கூட, 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாக பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்து பின்னர் வேக இசைக்கு மாரும் நடத்தின் வேகமும் அத்தோடு அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கும் சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு.

பாரசீக வளைகுடாவில் இருந்து வந்த அரபியார்களால் கிபி 17வது நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் "தாரா" இசை மாலைதீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும். இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தப்படி அமர்ந்து இசைப்பார்கள். ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும். போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேகை இசையாக மாறும்.

"கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுடீன் (1620-1648), என்ற சுல்த்தானின் காலத்தில் மாலே கோட்டை சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப் பட்டதாகும்.

20ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்ப பாகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுடீன் என்ற சுல்த்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.


"பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குபரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். 1968இல் குடியரசான பிறகு சுல்த்தான் ஒருவர் இல்லத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.

[தொகு] விடுமுறை நாட்கள்

மாலைதீவுகளில் இசுலாமிய நாட்காட்டியே பாவணையில் உள்ளது. விடுமுறை நாட்கள் அந்நாட்காட்டின்படியான கணிக்கப்படுவதால் கிரெகொரியின் நாட்காட்டி யில் விடுமுறை நாட்கள் வருடாவருடம் வேறுபடுவதோடு ஒரு கிரெகொரியின் ஆண்டில் ஒரே விடுமுறை இரண்டு முறை வருவதற்கான சந்த்தர்பங்களும் உண்டு.[7]

மாலைத்தீவுகளின் பொது வங்கி விடுமுறை நாட்கள்
நாள் பெயர் நாட்கள் குறிப்புகள்
ஜனவரி 1 புத்தாண்டு 1
வேறுபக்கூடியது அஜ் பெருநாள் 1
வேறுபடக்கூடியது எடி அல்-அடா 4 ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியிட ஆயத்தாமவதை குறிக்கும்
வேறுபடக்கூடியது இசுலாமிய புத்தாண்டு 1
வேறுபடக்கூடியது மீலவ்லிட் அல் நபி 1 நபிகளின் பிறந்த நாள்
வேறுபடக்கூடியது தேசிய நாள் 1
வேறுபடக்கூடியது இஸ்லாம் மததை தழுவிய நாள் 1
ஜூலை 26 சுதந்திர நாள் 2
வேறுபடக்கூடியது ரமதான் 1 ரமதான் மாத ஆரம்பம்
வேறுபடக்கூடியது ஈத் அல் பிதிர் 3 ரமதான் மாத முடிவு
நவம்பர் 3 வெற்றி நாள் 1
நவம்பர் 11 குடியரசு தினம் 2

[தொகு] குறிப்புகள்

  1. உலக போர்க்கள்
  2. இலங்கை இந்திய பங்கு
  3. பிபிசி செய்திகள்
  4. வியாபாரம்
  5. நிர்வாகம்
  6. பௌத்தம்
  7. மாலைதீவுகள் விடுமுறை நாட்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

மாலைதீவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கி நூல்
மேற்கோள்கள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கி மூலம்
படிமங்கள் காமன்ஸ்
செய்திகள் விக்கி செய்திகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com