Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சிங்களம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிங்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிங்களம்
සිංහල (சிங்ஹள)
 நாடுகள்: இலங்கை 
பகுதி: வட இலங்கை தவிர்ந்த
 பேசுபவர்கள்: 16 மில்லியன் 
நிலை: 70[1]
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 இந்தோ-ஈரானிய
  இந்தோ-ஆரிய
   தென் வலயம்
    சிங்களம்-மாலைத்தீவு
     சிங்களம் 
எழுத்து முறை: சிங்கள எழுத்து முறை பிராமி மொழியை தழுவியதாகும். 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இலங்கை
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: si
ISO 639-2: sin
ISO/FDIS 639-3: sin 
சிங்கள் மொழியின் "அ" மற்றும் "ஆ" எழுத்துக்கள்
சிங்கள் மொழியின் "அ" மற்றும் "ஆ" எழுத்துக்கள்
 
Indic script
இப்பக்கம் இந்திய எழுத்துக்களை கொண்டுள்ளது. சரியான செயலி இல்லாவிட்டால் எழுத்துறுப்புகள் மாறியோ அல்லது குறைவாகவோ காணப்படலாம். மேலும்...

சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது.

சிங்கள எழுத்துக்கள், கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பண்டைய வட இந்தியப் பிராமி வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும். கிமு 6ம் நூற்றாண்டில், பயன்பாட்டிலிருந்த சில எழுத்துக்கள் திராவிட எழுத்து முறைமையிலிருந்து பெறப்பட்ட எழுத்துக்களால் மாற்றீடு செய்யப்பட்டன.

சிங்களம், ஏனைய இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், அவுஸ்திரோனீசியன் போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி எனப் பிழையாக விளங்கிக் கொண்டார்கள்.

சிங்களம் ஒரு தொன்மையான மொழி. இதன் வரலாறு கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது பல தொன்மையான இலக்கிய ஆக்கங்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக வட இந்திய இலக்கியங்களைப் பின்பற்றியே உருவாகின என்பதுடன், பெருமளவு பௌத்த சமயச் செல்வாக்குக்கும் உட்பட்டிருந்தன.

சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும்,ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் (ஸ்ரீலங்கா) யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும்.


பொருளடக்கம்

[தொகு] வரலாறு

கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது. அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது.

[தொகு] காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி

  • சிங்கள பிரகிரித் (கி.பி 3ம் நூற்றாண்டு வரை)
  • பிரதோ-சிங்களம் (கி.பி 3 - 7ம் நூற்றாண்டு வரை)
  • மத்திய சிங்களம் (கி.பி 7 - 12ம்் நூற்றாண்டு வரை)
  • புதிய சிங்களம் (12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை)

[தொகு] பேச்சு வழக்கு

சிங்களத்தில் பொதுவாக இரண்டு வகையான பேச்சு வழக்கு உள்ளது. தென் பகுதியில் உள்ள சிங்களவர் ஒருமாதிரியும், ஏனைய பகுதியில் உள்ள சிங்களவர் வேறுமாதிரியும் பேசுகின்றனர்.

இலங்கையில் உள்ள வேடர் இனமும் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றனர். இந்த மொழியில் சிங்களத்தின் ஆதிக்கம் இருந்தாலும், வேறெந்த மொழியிலும் இல்லாத பல சொற்கள் இவர்கள் மொழியில் உள்ளது.

சிங்களவர்
பண்பாடு

சிங்கள மொழி
சிங்களவர் சமயம்
சிங்கள இலக்கியம்
சிங்களப் புத்தாண்டு
கண்டி நடனம்
சிங்கள இசை
சிங்கள நாடகம்
சிங்கள ஓவியம்
சிங்களத் திரைப்படத்துறை
சிங்களவர் சமையல்
சிங்களவர் உடை
இலங்கைக் கட்டிடக்கலை
சிற்பம்
விளையாட்டு
சண்டைக் கலை
சிங்களத் தேசியம்

தொகு

[தொகு] பேச்சுச் சிங்களம்

  • எண்கள்
1 எக்காய் - ஒன்று
2 தெக்காய் - இரண்டு
3 துணாய் - மூன்று
4 ஹத்தறாய் - நான்கு
5 பஹாய் - ஐந்து
6 ஹயாய் - ஆறு
7 ஹத்தாய் - ஏழு
8 அட்டாய் - எட்டு
9 நமயாய் - ஒன்பது
10 தஹயாய் - பத்து
11 எக்கொளஹாய் - பதினொன்று
12 தொளஹாய் - பன்னிரண்டு
20 விஸ்ஸாய் - இருபது
30 திஹாய் - முப்பது
40 ஹத்தலியாய் - நாப்பது
50 பணஹாய் - ஐம்பது
60 ஹட்டாய் - அறுபது
70 ஹத்தாவாய் - எழுபது
80 அசுவாய் - எண்பது
90 அணுவாய் - தொண்ணூறு (தொண்பது)
100 சீயாய் - நூறு
1000 தஹாய் - ஆயிரம்
10 000 தாதாய் - பத்தாயிரம்
100 000 லக்சயாய் - இலட்ச்சம்
10 000 000 கோடிய - கோடி

[தொகு] சொற்கள், சொற்தொடர்கள்

  • ஆயுபோவன் - வணக்கம்
  • ஒபட்ட சிங்களவ தன்னுவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா?
  • ஒயா தெமழ தேருனுவாத - உங்களிற்கு தமிழ் தெரியுமா? (ஒயா - உங்களிற்கு, தெமழ - தமிழ், தேருனுவாத அல்லது தன்னுவாத - தெரியுமா?)
  • ஓயாட்ட டிரைவிங் லைசன்ஸ் தியனுவாத? - உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா?
  • ஒயாட்ட ஆதார பலாபத்திர தியனுவாத? - உங்களிடம் வாகனத்திற்கான வரிப்பத்திரம் உள்ளதா?
  • ஒவ் - ஆம்
  • தண்ணுவா - தெரியும்.
  • டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம்
  • கொச்சற தமாய் புளுவண்- கொஞ்சம் தான் தெரியும் (கொச்சற - கொஞ்சம், தமாய் - தான், புளுவண் - தெரியும்)
  • கொய்த யன்ன? - எங்கே போறீங்க?
  • கெவல் கொகெய்த - வீடு எங்கே? (கெவல் - வீடு, கொகெய்த - எங்கே)?
  • வல்லவத்த - வெள்ளவத்தை (குறிப்பு: சிங்களத்திலும் தமிழிலும் இடப்பெயர்கள் சிறிதளவு மாறுபடும்)
  • ஒயா கொகேத வடக்கரண்ணே - நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள்.
  • மங் திருக்கொணாமலே வடக்கரணவா - நான் திருகோணமலையில் வேலை செய்கின்றேன்.
  • கோமத சப்ப சனிப்ப காறய? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா?
  • கொழும்பட்ட கொய் பாறங் யண்டோன? - கொழுப்புக்கு எப்படி போறது?
  • கமத்நா - பரவாயில்லை
  • வரதாக்ன - பரவாயில்லை.
  • போம கொந்தாய் - மிகவும் நலமாய்யிருக்கின்றேன். (போம - மிகவும், கொந்தாய் - நல்லது)
  • ஸ்தூதி - நன்றி
  • காவத? - சாப்பிட்டிங்களா?
  • மங் காவா - நான் சாப்பிட்டேன் (மங் - நான், காவா - சாப்பிட்டேன்)
  • தே பொனவத் - தேனீர் குடிப்பீர்களா?
  • ஆண்டுவ - அரசாங்கம்
  • பட்டங்கத்தத? - ஆரம்பிச்சாச்சா? (ஸ்டாட்பண்ணியாயிற்றா - பொதுவாக சோதனைகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளில் பாவிக்கப்படுவது)
  • கீயத - எவ்வளவு?
  • இத்துறு சல்லி தெண்ட - மிச்சக் காசு தாருங்க (இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தெண்ட - தாங்க)
  • மே பாற அம்பேபுஸ்ஸ யன்ன புளுவண்த - இந்தப் பாதையால் அம்பேபுஸ்ஸ போக இயலுமா? (மே - இந்த, பாற - பாதை, யன்ன- போக, புளுவண்த - இயலுமா?)
  • மம ஓயாட்ட ஆதரே - நான் உங்களைக் காதலிக்கின்றேன்.
  • மாம் ஓயாட்ட கமதி - நான் உங்களை விரும்புகின்றேன்.

[தொகு] உறவுச் சொற்கள்

  • தாத்தா - அப்பா
  • அம்மே (அல்லது அம்மா) - அம்மா
  • ஐயா - அண்ணா
  • அக்கா - அக்கா
  • மல்லி - தம்பி
  • நங்கி (தங்கி) - தங்கை
  • சகோதரய - சகோதரன்
  • புத்தா - மகன்
  • துவ - மகள்
  • பான - மருமகன்
  • மல்லி கே புத்தா - தம்பி யின் மகன்
  • அக்கா கே துவ - அக்கா வின் மகள்
  • மச்சாங் - இது தற்போதைய சிங்களப் பாவனையில் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கப் பயன்படுகின்றது.

[தொகு] அகராதிகள்

[தொகு] குறிப்பு

  1. மொழி நிலை

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com