மே 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மே 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMVIII |
மே 13 கிரிகோரியன் ஆண்டின் 133ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 134ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 232 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1619 - டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.
- 1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
- 1765 - யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.
- 1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.
- 1830 - எக்குவாடோர் விடுதலை அடைந்தது.
- 1846 - ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.
- 1861 - பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் அவதானிக்கப்பட்டது.
- 1880 - நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.
- 1888 - பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.
- 1913 - நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: வட ஆபிரிக்காவில் ஜெர்மனிய மற்றும் இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.
- 1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
- 1954 - சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.
- 1960 - உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
- 1967 - சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.
- 1969 - மலேசியாவில் கோலாலம்பூரில் சீனர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
- 1981 - ரோமில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
- 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
- 1996 - வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.
- 1997 - இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- 1998 - இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.
- 1998 - இந்தியா மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஜப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.
- 2005 - உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - அல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
- 2006 - திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.
- 2007 - திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணகத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 1882 - ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)
- 1905 - பக்ருதின் அலி அகமது, இந்தியக் குடியரசுத் தலைவர், (இ. 1977)
- 1918 - பாலசரஸ்வதி, பரத நாட்டிய மேதை (இ. 1984)
- 1956 - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய குரு
- 1978 - மைக் பிபி, அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1898 - பி. ஆர். ராஜமய்யர், தமிழ் எழுத்தாளர் (பி. 1872)
- 1978 - வி. தெட்சணாமூர்த்தி, தவில் மேதை (பி. 1933)
- 2001 - ஆர். கே. நாராயண், இந்திய நாவலாசிரியர் (பி. 1906)