வால்வெள்ளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வால்வெள்ளி (Comet) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம aggregates என்பனவும் கலந்து உருவானவை.
சூரிய நெபுலாக்கள் ஒடுங்கும்போது மீந்துபோன கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய நெபுலாக்களின் வெளி விளிம்புகள், நீர், வாயுநிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகப் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாக வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளை பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வர்ணிப்பது சரியல்ல.