ஜூன் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 12 கிரிகோரியன் ஆண்டின் 163ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 164ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1429 - நூறாண்டுகள் போர்: ஜோன் ஒஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.
- 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய இராணுவத் தளபதி தொமஸ் கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
- 1830 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
- 1898 - பிலிப்பீன்ஸ் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1899 - ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநீலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
- 1902 - ஆஸ்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
- 1934 - பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.
- 1935 - பொலீவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் ஜெர்மனியரிடம் சரணடைந்தனர்.
- 1943 - நாசி ஜெர்மனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.
- 1964 - தென்னாபிரிக்க நீதிமன்றம் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.
- 1967 - சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1987 - மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை அறிவிக்கப்பட்டது.
- 1990 - ரஷ்யக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து ரஷ்யாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.
- 1991 - போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் அதிபரானார்.
- 1991 - மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1999 - நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.
- 2003 - தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.
- 2005 - அருளானந்தம் சுரேஸ் ஜோக்கிம் ten bin bowling என்ற விளையாட்டினை ரொரண்டோவில் உலக சாதனைக்காக 100 மணித்தியாலங்கள் தொடர்ந்து விளையாடி தனது முப்பதாவது கின்னஸ் உலக சாதனையினை நிலைநாட்டினார்.
- 2006 - கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது.
- 2006 - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1924 - ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர்
- 1932 - பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)
- 1942 - பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய உடற்றொழிலியலாளர்
- 1957 - ஜாவெட் மியன்டாட், பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாளர்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- பிலிப்பீன்ஸ் - விடுதலை நாள்
- உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
- ரஷ்யா - ரஷ்ய நாள் (1990)