ஏப்ரல் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டின் 113ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 114ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1343 - எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
- 1635 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1639 - புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
- 1660 - சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
- 1867 - சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
- 1905 - யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
- 1932 - நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
- 1940 - மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்
- 1948 - அரபு-இஸ்ரேல் போர், 1948: இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
- 1966 - முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
- 1982 - கொங்க் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1984 - எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1987 - ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்டஹ்தில் 28 கடிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1990 - நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
- 1993 - இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.
- 1993 - இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
- 1993 - எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1997 - அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1791 - ஜேம்ஸ் பியூக்கானன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அதிபர் (இ. 1868)
- 1858 - மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1947)
- 1867 - ஜொகான்னெஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1928)
- 1897 - லெஸ்டர் பியர்சன், நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் (இ. 1972)
- 1902 - ஹால்டோர் லாக்ஸ்னெஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
- 1938 - எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1977 - கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்
[தொகு] இறப்புகள்
- 1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
- 1951 - சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
- 1992 - சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)
- 1993 - லலித் அத்துலத்முதலி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் (பி. 1942)
- 2007 - போரிஸ் யெல்ட்சின், முன்னாள் ரஷ்ய அதிபர் (பி. 1931)