மார்ச் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 66ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1079 - ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
- 1447 - ஐந்தாம் நிக்கலாஸ் பாப்பரசர் ஆனார்.
- 1479 - கனாரி தீவுகளை போர்த்துக்கல் காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது.
- 1521 - பேர்டினண்ட் மகலன் குவாம் தீவை அடைந்தார்.
- 1788 - கைதிகளைக் குடியமர்த்தும் திட்டத்தில் முதற்படியாக முதலாவது தொகுதி கைதிகள் அடங்கிய கப்பல் நோர்போக் தீவை அடைந்தது.
- 1836 - டெக்சாசில் அலாமோ நகரை மெக்சிக்கோ படைகள் தாக்கிக் கைப்பற்றினர்.
- 1869 - திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
- 1940 - குளிர்காலப் போர்: பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தற்காலிகப் போர் ஓய்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1945 - ருமேனியாவில் கம்யூனிச அரசு பதவிக்கு வந்தது.
- 1946 - வியட்நாம் போர்: ஹோ சி மின் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பிரான்ஸ் வியட்நாமை பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோசீனக் கூட்டமைப்பினுள் தன்னாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.
- 1953 - ஸ்டாலினின் மறைவையடுத்து சோவியத்தின் பிரதமராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை செயலாளராகவும் கியோர்கி மாலென்கோவ் பதவியேற்றார்.
- 1957 - ஐக்கிய இராச்சியக் குடியேற்ற நாடுகளான கோல்ட் கோஸ்ட் மற்றும் பிரித்தானிய டொகோலாந்து ஆகியன இணைந்து கானா குடியரசு என்ற பெயரில் விடுதலை பெற்றன.
- 1964 - காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
- 1967 - திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
- 1975 - ஈரானும் ஈராக்கும் தமது எல்லை தொடர்பாக உடன்பாட்டிற்கு வந்தன.
- 1987 - பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1475 - மைக்கலாஞ்சலோ புவோனரோட்டி, இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர் (இ. 1564)
- 1508 - ஹுமாயூன், இரண்டாவது முகலாயப் பேரரசர் (இ. 1556)
- 1869 - சேர் ஜேம்ஸ் எமர்சன் டென்னெண்ட், எழுத்தாளர், பயணி, இலங்கைக்கான பிரித்தானிய காலனித்துவ செயலாளர் (பி. 1804)
- 1928 - காபிரியேல் மார்க்கெஸ், நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர்
- 1937 - வலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்
- 1948 - ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியர், இசையமைப்பாளர்
[தொகு] இறப்புக்கள்
- 1888 - லூயீசா ஆல்கொட், அமெரிக்க நாவலாசிரியை (பி. 1832)
- 1973 - பெர்ல் பக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)