அக்டோபர் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | அக்டோபர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMVIII |
அக்டோபர் 26 கிரிகோரியன் ஆண்டின் 299வது நாளாகும். நெட்டாண்டுகளில் 300வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 740 - ரோமின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்க பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
- 1640 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1859 - வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
- 1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பக்கிங்ஹாம் அரசரால் எடுக்கப்பட்டது.
- 1905 - நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சான்ரா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 1947 - காஷ்மீர் மஹாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
- 1947 - ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
- 1955 - ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
- 1956 - ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது
- 1979 - தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1984 - "பேபி ஃபே" (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்றது.
- 1994 - ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 1994 - பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
- 1995 - இஸ்லாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
- 2000 - ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
- 2001 - ஐக்கிய அமெரிக்கா "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது.
- 2002 - மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
- 2003 - கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.
[தொகு] பிறப்புக்கள்
- 1959 - எவோ மொரல்ஸ், பொலிவியாவின் சனாதிபதி
- 1985 - அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
[தொகு] இறப்புகள்
- 2001 - மரகதம் சந்திரசேகர், இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்
[தொகு] சிறப்பு நாள்
- ஆஸ்திரியா - தேசிய நாள்