நவம்பர் 6
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 310வது நாளாகும். நெட்டாண்டுகளில் 311வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 55 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1759 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
- 1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.
- 1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் "லேடி ஹவ்லொக்" முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.
- 1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
- 1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜேர்மனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.
- 1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.
- 1962 - ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
- 1965 - ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
- 1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் இருக்க சம்மதம் தெரிவித்தனர்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- டொமினிக்கன் குடியரசு - அரசியலமைப்பு நாள் (1844)
- தஜிகிஸ்தான் - அரசியலமைப்பு நாள் (1994)