நவம்பர் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | நவம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMVIII |
நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324வது நாளாகும். நெட்டாண்டுகளில் 325வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 284 - டயோக்கிளேட்டியன் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- 1194 - பலேர்மோ ஆறாம் ஹென்றி மன்னனால் கைப்பற்றப்பட்டது.
- 1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் மன்னன் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் சார் மன்னன் பீட்டரைத் தோற்கடித்தான்.
- 1910 - பிரான்சிஸ்கோ I. மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரை அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
- 1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1923 - ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
- 1936 - ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைபில் இணைந்தன.
- 1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
- 1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
- 1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
- 1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணுஉலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
- 1993 - மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
- 1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
- 1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1750 - திப்பு சுல்தான், மைசூர் இராச்சிய மன்னன் (இ. 1799).
- 1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- யுனிசெஃப் - அனைத்துலக குழந்தைகள் நாள்
- மெக்சிக்கோ - புரட்சி நாள் (1910)
- வியட்நாம் - ஆசிரியர் நாள் (Ngày nhà giáo Việt Nam)