செப்டம்பர் 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 253வது நாளாகும். நெட்டாண்டுகளில் 254வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1898 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.
- 1939 - கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
- 1967 - கிப்ரால்டர் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
- 1974 - கினி பிசாவு (Guinea-Bissau) போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1976 - பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 - ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லாடன் அல் கைடா அமைப்பை ஆரம்பித்தார்.
- 2002 - சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
- 2006 - ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.
- 2007 - 1999 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பினார்.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1975 - ஜோர்ஜ் தொம்சன் (George Paget Thomson), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- 1983 - ஏ. கே. செட்டியார், காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்தவர் (பி. 1911)
- 1983 - Felix Bloch, சுவிசில் பிறந்த இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
[தொகு] சிறப்பு நாள்
- கிப்ரால்டர் - தேசிய நாள்
- சீனா - ஆசிரியர் நாள்