ஜூலை 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 19 கிரிகோரியன் ஆண்டின் 200வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 201வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1870 - பிரான்ஸ் ப்ரூசியா மீது போரை ஆரம்பித்தது.
- 1947 - பர்மிய தேசியவாதியான ஓங் சான் (Aung San) மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.
- 1967 - வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானக்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 - நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1980 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
- 1996 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
- 1996 - ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1893 - விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)
- 1938 - ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
- 1979 - தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்.
[தொகு] இறப்புகள்
- 1947 - சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர், யாழ் நூல் இயற்றியவர் (பி. 1892)
- 1947 - ஓங் சான் (Aung San), பர்மிய தேசியவாதி (பி. 1915)
- 1987 - ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)
[தொகு] சிறப்பு நாள்
- மியான்மார் - பர்மிய மாவீரர் நாள்
- நிக்கரகுவா - தேசிய விடுதலை நாள்