See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தமிழிசை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தமிழிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


இசை வடிவங்கள்
தமிழிசை
கருநாடக இசை
கிராமிய இசை
மெல்லிசை
திரையிசை
தமிழ் ராப் இசை (சொல்லிசை)
தமிழ் பாப் இசை
துள்ளிசை
தமிழ் ராக் இசை
தமிழ் இயைபிசை (fusion)
தமிழ் கலப்பிசை (Remix)
பாடல் வகைகள்
நாட்டார் பாடல்கள்
கானா பாடல்கள்
சித்தர் பாடல்கள்
ஈழப்போராட்ட பாடல்கள்
கிறிஸ்தவப் பாடல்கள்
பக்திப் பாடல்கள்
இஸ்லாமியப் பாடல்கள்
பன்மொழிப் பாடல்கள்
[[]]
[[]]

தொகு

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை பகுப்படுத்தியோடு, இசை தமிழர் வாழ்வியியலில் ஒரு முக்கிய அம்சமாக தொன்றுதொட்டு இருந்துவருகின்றது. தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாக செம்மை பெற்றது.

தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை மற்றும் பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் இசை நயத்துடன் பாடல்களைப் பார்க்கலாம். அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை.

பொருளடக்கம்

[தொகு] சுரம்

தமிழிசையில் அடிப்படை ஒலி நிலைகளை சுரம் என்று வழங்கப்பட்டது.

[தொகு] பண்

தமிழிசையின் அடிப்படை வடிவங்களை பண் என்று வழங்கப்பட்டது. 'பாலை யாழ்', 'குறிஞ்சி யாழ்', 'மருத யாழ்', 'நெய்தல் யாழ்' என்பன முதன்மையான பண்கள் ஆகும். மொத்தம் 103 பண்கள் தொகுக்கப்பட்டு, அவற்றுக்கான குறிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. பண்ணை விரிவாக்கி பாடுதலுக்கு 'ஆளத்தி' என வழங்கப்பட்டது.

[தொகு] மண்டிலம்

பாடல்கள் மூன்று மண்டிலங்களான (ஸ்தாயி) மெலிவு, சமண் மற்றும் வலிவு ஆகியவற்றில் இசைக்கப்பட்டது.

[தொகு] தமிழர் அன்றாட வாழ்வில் பாட்டு

"தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கருக்கொண்டதுமே நலுங்குப் பாடல், மண்ணில் உதித்ததுமே குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல், சிறுவர்களுக்குத் நிலாப்பாடல், (பாரதியின் பாப்பா பாடல்), இளைய வயதில் வீரப்பாடல் மற்றும் காதல் பாடல், திருமணத்தில் திருமணப் பாட்டு, உயிர் துறந்தபின் ஒப்பாரிப் பாட்டு என மனித வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன."[1]

[தொகு] தமிழிசை வாணர்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழிசை வாணர்கள்

[தொகு] இசைக் கருவிகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் இசைக்கருவித் தொழில்நுட்பம்

[தொகு] தமிழிசைக்கு வந்த சோதனைகள்

தமிழர், இசையிலும், இயலிலும், நாடகவியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. சைவ சமயத்தை பரப்பிய தமிழிசை நூல்கள் சமணர்களால் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் எதிர்கொள்ளப்பட்டன.

[தொகு] தமிழிசை நூற்கள்

  • பெருநாரை
  • பெருங்குருகு
  • பேரிசை
  • சிற்றிசை
  • இசைமரபு
  • இசைநுணுக்கம்
  • சிலப்பதிகாரம்

[தொகு] தமிழிசை ஆய்வுகள்

  • 1732 - சதுரகராதி - வீரமாமுனிவர் - "பாலை, பாவகை, பண்முறை, பண்கள் பாடக் கூடிய நேரம், பண்களுக்குரிய தேவதைகள், 32 பண்களின் பெயர்கள், தாளம், சந்தம் எனப்படும் வண்ணம், யாழ்ப் பெயர்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன" [2]
  • 1907 - ராவ் சாஹேப் ஆபிரிகாம் பண்டிதர் - கருணாமிர்த சாகரத் திரட்டு
  • 1940 - செல்வி ஜசக் - பழந்தமிழிசை (ஆய்வேடு)
  • 1947 - விபுலாநந்தர் - யாழ் நூல்
  • க. வெள்ளை வாணர் - இசைத்தமிழ் (நூல்)
  • கு. கோதண்டபாணியார் - பழந்தமிழிசை (நூல்)
  • அ. இராகவன் - இசையும் யாழும்
  • வீ. பா. கா சுந்தரம் - பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
  • 2006 - மார்கரெட் பாஸ்டின் வபிச - இன்னிசை யாழ்

[தொகு] மேற்கோள்கள்

  1. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 133
  2. மார்கரெட் பாஸ்டின் வபிச. (2006). இன்னிசை யாழ். திருச்சி: கம்பானியன் விளம்பர சேவை.

[தொகு] உசாத்துணைகள்

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -