சிலப்பதிகாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
பொருளடக்கம் |
[தொகு] கதைச் சுருக்கம்
சிலப்பதிகரத்தில் கோவலன் என்னும் வணிகனும், கற்பிற் சிறந்தக் குடும்பப் பெண்ணாகவும், கோவலனின் மனைவியாகவும், கண்ணகி, என்ற இருவர்தான் மிகமுக்கியக் கதாப்பாத்திரங்கள். இருவரும் சோழ நாட்டின் பூம்புகார் நகரில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மாதவி எனும் நாட்டியப் பெண்ணுடன் தொடர்புக் கொண்டுத் தன் மனதை அவளிடம் பறிகொடுத்த கோவலன் கண்ணகியைத் தவிர்க்கத் தொடங்கினான். பிறகுக் கன்னகியையே மறந்தக் கோவலன் மாதவியுடன் தங்கித் தன் செல்வம் அனைத்தையும் கரைத்தான். பிறகு மாதவியை விட்டுக் கண்ணகியிடம் திரும்பியவுடன் இருவரும் பாண்டிய நாடுச் சென்றுப் பிழைப்பு நடத்த, முடிவெடுத்து மதுரைக்குக் கிளம்பினர். அங்கேச் சென்றப் பொது அவர்களிடம் இருந்த ஒரேச் செல்வம் கண்ணகியின் இருச் சிலம்புகள். அவற்றில் ஒன்றை ஓர் பொற்கொல்லனிடம் விற்கச் சென்றான் கோவலன். அப்போதுத் தொலைந்துப் போனப் பாண்டிய அரசியின் சிலம்பை மாதிரிக் கண்ணகியின் சிலம்பு இருந்ததால், பரிசுக்காக ஆசைப்பட்டுப் பொற்கொல்லன் பாண்டிய மன்னனிடம் காட்டிக் கொடுத்து விட்டான். மன்னனும் தீர விசாரிக்காமல் கோவலனுக்கு மரணத் தண்டனை விதித்தான். கோவலனின் தலைத் துண்டிக்கப்பட்டது. இதை அறிந்து வேகுண்டேளுந்தக் கண்ணகி நேராக அரசுச் சபைச் சென்றார். அங்கேப் பாண்டிய ராணியின் சிலம்பினுள் என்ன இருந்தன என்றுக் கேட்டாள். அரசியோ முத்து என்றாள். உடனேத் தன் மற்றொரு சிலம்பை கழட்டி தரையில் போட்டு உடைத்தவுடன் அதிலிருந்து வெளிப்பட்டதோ மாணிக்கக் கற்கள். தன் தவற்றை உணர்ந்த அரசன் தனக்கு மரண தண்டனையே கதி என கண்ணகியின் கால்களில் விழுந்தான். ஆனால் கோபம் தனியதக் கண்ணகி மதுரை மாநகரையே தன் கடுஞ்சினத்தல் எரித்தாள்.
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நிலைப்பாடுகளாவன
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
[தொகு] கதாப்பாத்திரங்கள்
கண்ணகி - கற்பிற் சிறந்தக் குடும்பப் பெண், சந்தேகப்படாத, ஆதரவுடையக் குணம் படைத்தவள். அநியாயத்திற்கு வேகுண்டேலும் குணம் படைத்தவள். கடுஞ்சினத்தல் மதுரை மாநகரையே எரித்தார். கோவலன் தான் செய்தத் தவற்றை உணர்ந்துக் கண்ணகியிடம் மன்னிப்புக் கேட்டப்பொழுது, அவள் கோவலனைக் கண்டிப்பதற்குப் பதிலாக அவனை ஏற்றுக்கொண்டால். தனதுக் கணவனை துளியும் சந்தேகப்படாமல் அவனை ஏற்றுக்கொண்டால். புகாரிலிருந்து மதுரைக்குச் செல்லலாம் என்று கோவலன் கூறியதற்கு மறுப்பின்றி ஆதரவுடன் ஒப்புக்கொண்டல் கண்ணகி. தனதுக் கணவன் கோவலனுக்கு வழங்கப்பட அன்நீதியிக்காக மதுரை எரிந்து அழியவேண்டும் என்று தான் சாபம் விட்டால். தனது பரிசுத்தமான கர்புடைமையால் மதுரை நகரம் உண்மையிலேயே எரிந்து சாம்பலாகியது. கண்ணகி என்றென்றும் நம் மனதில் ஒரு நீங்க இடத்தைப் பெற்றிருப்பார்.
கோவலன் - திறமையான வணிகன், வீரத்தின் வடிவம், மன்னிப்புக் கேக்கப் பயப்படாதவன், முட்டாள் தனமான மோகத்தால் அழிந்தவன். சிலப்பதிகாரத்தின் ஆரம்பக்கட்டங்களில் மதிநுட்பத்துடன் விட்டிற்குப் பெருமைச் சேர்க்கும்படி நடந்துக்கொண்டார் கோவலன். வீட்டின் மகனாக இருந்துப் பெற்றோருக்கு மரியாதையும் மானைவிக்குப் பாசமும் அளித்தார். மாதவியின் நடன அழகைப் பார்த்து மயங்கிய கோவலன் அவள்மிதுத் திவேரக் காம உணர்ச்சியை ஏற்ப்படுதிக்கொண்டர். அந்த முட்டாள் தனமனச் செயலேச் சிலப்பதிகாரக் காப்பியத்தின் திருப்புமுனை. இந்தத் திருப்புமனையே கோவலனின் இறப்பை முடிவுச் செய்தது. இத்திருப்புமுனை இல்லையென்றால் கண்ணகி கோவலன் தம்பதியினர் மதுரைக்குப் பணமின்மையால் சென்றிருக்கத் தேவையேயில்லை. கோவலன் வஞ்சியில் காட்டிய வீரம் என்றென்றும் நம் மனதில் ஒரு நீங்கா இடத்தை பெற்றிருக்கும்.கதை என்னைக் கவர்ந்த விதம்.
மாதவி - மயிலுக்குப் போட்டியான அழகுப் படைத்தவள், சில்மிஷான்களால் கோவலனை மயக்கி அவனதுச் செல்வங்களை அளித்தவள், தன் பேச்சில் உறுதியாக இருப்பவள். கோவலனுக்கு அளவற்ற அழகுற்ற மனைவி இருந்துப் போதிலும் மாதவி தன் மனதைக் கவர ஏதோ ஒருக் காரணம் இருந்தது. நாட்டியத்தில் அவள் வெளிக்காட்டிய நளினம் தான் அதற்குக் காரணம் என்று பலரும் ஒப்புக்கொள்கின்றனர். மாதவியின் தாயாரே அவளைக் கோவலனை மயக்கத் தூண்டிவிட்டார். தனது அம்மாவின் வார்த்தைகளால் தாகப்படுதப்பட்டு கோவலனை கன்னகியிடமிரிந்துப் பிரித்தாள். தனதுப் பிடிவாதத்தால், இறுதியில் கொவலனையையும் இழந்தாள். வேசிகலேன்றலே உடலை வைத்துப் பிழைப்பவர்கள் ஆனால் மாதவி கர்புடைமையைக் கடைப்பிடித்து, கோவலனுக்கு மட்டும் தன் உள்ளத்தை அளித்தது நாம் கற்றுக்கொள்ளவேண்டியப் ஒருப் பாடம்.
[தொகு] மொழிபெயர்ப்பு
- Silappathikaram, the Epic of The Anklet, beautifully translated from sen(ancient)-Tamil into English by Alain Danielou.
[தொகு] வெளி இணைப்புகள்
- சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்
- சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்
- சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம்
- Tamil Nadu's Silappathikaram Epic of the Ankle Bracelet: Ancient Story and Modern Identity by Eric Miller
- Tamil Culture, Kannagi and the Ankle Bracelet
இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் |
---|
கதைமாந்தர் |
கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவன் | வசவதத்தை | கோசிகன் |
மாதலன் | கவுந்தி அடிகள் | கோப்பெருந்தேவி |
மற்றவை |
புகார் | மதுரை | வஞ்சி |