பெப்ரவரி 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 4 கிரிகோரியன் ஆண்டின் 35 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 330 (நெட்டாண்டுகளில் 331) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1783 - ஐக்கிய அமெரிக்கா மீது தனது அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக ஐக்கிய இராச்சியம் அறிவித்தது.
- 1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1794 - பிரெஞ்சுக் குடியரசு முழுவதும் அடிமைத் தொழில் சட்டவிரோதமாக்கப்பட்டது.
- 1810 - கரிபியன் தீவுகளான குவாட்லூப் (Guadeloupe) பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1834 - இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்டது.
- 1859 - கிரேக்க பைபிளின் 4ம் நூற்றாண்டுக் கையெழுத்துப்படி ஒன்று எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1899 - பிலிப்பீன்ஸ்-அமெரிக்கப் போர் ஆரம்பமானது.
- 1932 - இரண்டாம் உலகப் போர்: சீனாவின் ஹார்பின் நகரை ஜப்பான் பிடித்தது.
- 1936 - முதற்தடவையாக ரேடியம் E என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் முடிவுக்கு வந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உக்ரேனில் யால்ட்டா மாநாட்டில் சந்தித்தனர்.
- 1948 - இலங்கை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1957 - திருகோணமலையில் கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற திருமலை நடராசன் போலீசாரினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்.
- 1966 - ஜப்பான் போயிங் விமானம் டோக்கியோவில் வீழ்ந்ததில் 133 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்றார்.
- 1976 - குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் நிலநடுக்கத்தில் 22,000 பேர் இறந்தனர்.
- 1978 - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிபராக ஜே. ஆர். ஜெயவர்த்தனா பதவியேற்றார்.
- 1997 - இஸ்ரேலில் இரண்டு உலங்குவானூர்திகள் வானில் மோதியதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - யூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக "சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ" எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 2007 - ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய "பிரமாஸ்" ஏவுகணை ஒரிசா ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
- 2007 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய கூட்டுப் பிரார்த்தனையில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1913 - றோசா பாக்ஸ், ஒர் ஆபிரிக்க அமெரிக்க குடியுரிமைகள் செயற்பாட்டாளர் (இ. 2005)
- 1921 - கே. ஆர். நாராயணன், இந்தியாவின் ஜனாதிபதி (இ. 2005)
[தொகு] இறப்புகள்
- 1747 - வீரமாமுனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (பி. 1680)
- 1928 - ஹெண்ட்ரிக் லோரெண்ட்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1853)
- 1974 - சத்தியேந்திரா போஸ், இந்திய இயற்பியலாளர் (பி. 1894)