டிசம்பர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364வது நாளாகும். நெட்டாண்டுகளில் 365வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 1 நாள் உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
- 1862 - வட கரோலினாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
- 1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
- 1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1903 - சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
- 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1922 - சோவியத் சோசலிசக் குடியர்சுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
- 1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
- 1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
- 1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
- 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய சுதந்திரக் கொடியை ஏற்றினார்.
- 1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
- 1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
- 1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
- 1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாமில் குண்டுவீச்சுகளாஇ நிறுத்தியது.
- 1996 - அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- 2004 - ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
- 2006 - நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
- 2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து பிள்ளைகள் படுகாயமடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
- 1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
- 1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
- 1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
[தொகு] இறப்புகள்
- 1691 - ராபர்ட் பொயில் (Robert Boyle), அறிவியலாளர் (பி. 1627)
- 1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை மன்னர் (பி. 1738)
- 1944 - றொமாயின் றோலாண்ட், (Romain Rolland), நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
- 1988 - இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
- 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937