ஸ்பெயின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Reino de España ரெயினோ டே எஸ்பாஞா ஸ்பெயின் இராச்சியம்
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Plus Ultra (இலத்தீன்) "Further Beyond" |
||||||
நாட்டுப்பண் Marcha Real (எசுப்பானியம்) "இராச்சிய அணி நடை" |
||||||
அமைவிடம்: ஸ்பெயின் (dark green)
– in ஐரோப்பா (light green & dark grey) |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
மட்ரிட் |
|||||
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம்[1] | |||||
தேசிய இனங்கள் | 89% எசுப்பானியர், 11% சிறுபான்மை இனக்குழுகள் | |||||
மக்கள் | எசுப்பானியர் | |||||
அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி | |||||
- | அரசர் | ஒன்றாம் வான் கார்லோஸ் | ||||
- | அரசியல் தலைவர் | ஹோசே லுயீஸ் ரொட்ரிகெஸ் தாப்படேரோ |
||||
தோற்றம் | 15ம் நூற்றாண்டு | |||||
- | ஒன்றியம் | 1469 | ||||
- | வம்ச ஒன்றியம் | 1516 | ||||
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1 1986 | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 504,030 கிமீ² (51வது) 195,364 சது. மை |
||||
- | நீர் (%) | 1.04 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 estimate | 45,200,737[1] (28வது) | ||||
- | அடர்த்தி | 90/km² (106வது) 231/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2007[2] கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $1.310 டிரில்லியன் (11வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $33,700 (2007) (27வது) | ||||
மொ.தே.உ(பொதுவாக) | 2007[3] மதிப்பீடு | |||||
- | மொத்தம்l | $1.439 டிரில்லியன் (8வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $31,471 (2007) (26வது) | ||||
ஜினி சுட்டெண்? (2005) | 32[4] | |||||
ம.வ.சு (2005) | 0.949 (உயர்) (13வது) | |||||
நாணயம் | ஐரோ (€) ³ (EUR ) |
|||||
நேர வலயம் | CET4 (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
இணைய குறி | .es, .cat5 | |||||
தொலைபேசி | +34 | |||||
1 | Also serves as the Royal anthem. | |||||
2 | In some autonomous communities, Aranese (Occitan), Basque, Catalan/Valencian, and Galician are co-official languages. | |||||
3 | Prior to 1999 (by law, 2002) : Spanish Peseta. | |||||
4 | Except in the Canary Islands, which are in the WET time zone (UTC, UTC+1 in summer). | |||||
5 | The .eu domain is also used, as it is shared with other European Union member states. also .cat is used catalan speaking territories |
ஸ்பெயின் என்றழைக்கப்படும் ஸ்பெயின் இராச்சியம் ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட் ஆகும். ஸ்பானிய மொழி இங்கு பேசப்பட்டு வருகிறது. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். யூரோ இந்நாட்டின் நாணயம் ஆகும். பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
[தொகு] வரலாறு
இபேரியா தீபகற்பத்தின் பல்வேறு பழங்குடியினரும் இபேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிமு 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு செல்டிக் பழங்குடியினரும் பின் ஃபினீஷியர்களும்,கிரேக்கர்களும் கார்தாகினியர்களும் மெடிடரேனியன் கடற்பகுதிகளில் வெற்றிகரமாக குடிபுகுந்து வியாபார மையங்களை உருவாக்கி பல நூற்றாண்டுக்காலம் வாழ்ந்து வந்தனர்.
ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் தீபகற்பத்திற்கு வந்தனர். இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து "ஹிஸ்பானியா"வை உருவாக்கினர்.
ரோமானிய பேரரசிற்கு ஹிஸ்பானியா உணவு,ஆலிவ் எண்ணை,ஒயின் மற்றும் உலோகங்களை அளித்து வந்தது.
ஸ்பெயின் நாட்டின் தற்பொதைய மொழிகள்,மதம்,சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.