பெப்ரவரி 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | பெப்ரவரி 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | |
MMVIII |
பெப்ரவரி 26 கிரிகோரியன் ஆண்டின் 57 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 308 (நெட்டாண்டுகளில் 309) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1606 - டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.
- 1658 - வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.
- 1748 - "ஜேக்கப் டி ஜொங்" (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.
- 1794 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
- 1815 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.
- 1848 - இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1936 - இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.
- 1952 - ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
- 1972 - மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.
- 1991 - உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.
- 1991 - வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.
- 1993 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2001 - ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
- 2004 - மக்கெடோனியாவின் அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
[தொகு] பிறப்புகள்
- 1903 - குயிலியோ நாட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)
- 1946 - அகமது செவாயில், நோபல் பரிசு பெற்ற எகிப்திய வேதியியலாளர்
[தொகு] இறப்புகள்
- 1931 - ஓட்டோ வல்லாக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர், (பி. 1847)
- 1998 - தியோடர் ஷூல்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர், (பி. 1902)