See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
எல்பா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

எல்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எல்பா
Elba
மேற்குக் கரை
மேற்குக் கரை
புவியியல்
அமைவு டைரீனியன் கடல்
ஆள்கூறுகள் 42° 45.71’ N 10° 14.45’ E
தீவுக்கூட்டம் டஸ்கன் தீவுக்கூட்டம்
பரப்பளவு 223 கிமீ²
உயர் புள்ளி மொண்டெ கப்பான்னே (1,018 மீ)
ஆட்சி
இத்தாலியின் கொடி இத்தாலி
பிரதேசம் டஸ்கானி
மாகாணம் லிவோர்னோ மாகாணம்
பெரிய நகரம் போர்ட்டோஃபெராய்யோ (12,013)
இனம்
மக்கள் தொகை 31,059 (ஜன 1, 2007)
அடர்த்தி 138
எல்பாவில் இருந்து நெப்போலியன் பொனபார்ட் திரும்பினான்.
எல்பாவில் இருந்து நெப்போலியன் பொனபார்ட் திரும்பினான்.

எல்பா (Elba, இத்தாலிய மொழி: Ilva) என்பது இத்தாலியின் டஸ்கானி பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் கரையோர நகரமான பியோம்பினோவுக்கு 20 கிமீ தூரத்தில் உள்ளது (42°44′N, 10°22′E). டஸ்கான் தீவுகளில் இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் சிசிலி மற்றும் சார்டீனியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரியதும் ஆகும். எல்பாவுக்கு மேற்கே 50 கிமீ தூரத்தில் பிரெஞ்சு தீவான கோர்சிக்கா அமைந்துள்ளது.

இது கிட்டத்தட்ட 224 கிமீ² பரப்பளவும் கரையோர நீளம் 147 கிமீ உம் ஆகும். இதன் மிக உயரமான மலை மொண்டே கப்பானே 1,018 மீட்டர்கள் உயரமானது. இத்தீவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000 ஆகும்.

1814 இல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். மே 3, 1814 இல் இவன் இத்தீவின் நகரமான் போர்ட்டோஃபெராய்யோவை அடைந்தான். நெப்போலியன் தனது பாதுகாப்புக்காக 600 பேரைக்கொண்ட படைகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டான். பொதுவாக எல்பா தீவை இவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் பிரித்தானியக் கடற்படையினர் இத்தீவைக் கண்காணித்து வந்தனர்.

மொத்தம் 300 நாட்கள் இத்தீவில் வாழ்ந்த நெப்போலியன் பெப்ரவரி 26, 1815 இல் ஒருவாறாகத் தப்பித்து பிரான்சை அடைந்தான்.

1860 இல் இத்தீவு இத்தாலியின் கூட்டமைப்புக்குள் வந்தது. பிரெஞ்சுப் படைகள் ஜூன் 17, 1944 இல் இங்கு புகுந்து தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர்.

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -