ஏப்ரல் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஏப்ரல் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMVIII |
ஏப்ரல் 3 கிரிகோரியன் ஆண்டின் 93ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 94ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
- 1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த விளாடிமிர் லெனின் ரஷ்யா திரும்பினார்.
- 1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
- 1933 - நாசி ஜெர்மனியில் யூதர்களின் வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: பட்டான் தீபகற்பத்தில் ஜப்பானியப் படையினர் அமெரிக்க மற்றும் பிலிப்பீன்ஸ் படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1948 - தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
- 1958 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.
- 1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1973 - உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
- 1974 - 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
- 1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
- 1982 - போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீஇளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
- 1996 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோயேசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதூமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1934 - டேம் ஜேன் குட்டால், சிம்ப்பன்சியைப் பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்
- 1973 - பிரபுதேவா, இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் இயக்குநர்
[தொகு] இறப்புகள்
- 1680 - சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1630)
- 1932 - வில்ஹெம் ஓஸ்ட்வால்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய வேதியியலாளர் (பி. 1853)