டிசம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336வது நாளாகும். நெட்டாண்டுகளில் 337வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1755 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை விளக்கம் தீ விபத்தில் அழிந்தது.
- 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் தன்னை பிரான்சின் சக்கரவத்தியாக முடிசூட்டிக் கொண்டான்.
- 1805 - நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1843 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
- 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசெப் என்பவன் ஆஸ்திரியாவின் சக்கரவர்த்தி ஆனான்.
- 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் சக்கரவர்த்தியானான்.
- 1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் அரசியலமைப்பு சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
- 1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
- 1954 - சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
- 1956 - பிடல் காஸ்ட்ரோவும் அவரது ஆதரவாளர்களும் கியூபாவை கிரான்மா என்ற படகில் சென்றடைந்தனர்.
- 1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
- 1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
- 1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் சுதந்திர பெற்றது.
- 1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
- 1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
- 1980 - எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- 1990 - ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
- 1993 - ஹபிள் விண் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
- 1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
- 2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
- 2005 - போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
- 2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
- 2006 - பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1910 - ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
- 1933 - கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
- 1979 - அப்துல் ரசாக், பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
[தொகு] இறப்புகள்
- 1552 - புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
- 1911 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
- 1933 - ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்
- 2006 - வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)
[தொகு] சிறப்பு நாள்
- லாவோஸ் - தேசிய நாள்
- ஐக்கிய அரபு அமீரகம் - தேசிய நாள்
- ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்