மார்ச் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | மார்ச் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMVIII |
மார்ச் 13 கிரிகோரியன் ஆண்டின் 72ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 73ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 293 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1639 - ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு சமயவாதி ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்டது.
- 1781 - வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.
- 1811 - பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா (Lissa) என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- 1881 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1 இல் இடம்பெற்றது).
- 1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
- 1921 - மொங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
- 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்.
- 1943 - ஜேர்மனியப் படைகள் போலந்தின் யூதக் குடியேற்றங்களை அழித்தனர்.
- 1954 - வியட்நாம் போர்: வியட் மின் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தாக்கினர்.
- 1957 - கியூபா அதிபர் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவைக் கொல்ல மாணவ தீவிரவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
- 1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.
- 1979 - கிரெனடாவில் இடம்பெற்ற புரட்சி ஒன்றில் அதன் பிரதமர் எரிக் கெய்ரி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1992 - கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற (6.8 ரிக்டர் அளவு) நிலநடுக்கத்தில் 500 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- 1996 - ஸ்கொட்லாந்து, டன்பிளேன் நகரில் இடம்பெற்ற சூட்டு நிகழ்வில் 16 மாணவர்களும் ஓர் ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
- 1997 - அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரின் மீது பீனிக்ஸ் வெளிச்சங்கள் தெரிந்தன.
- 2003 - இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவாடுகாள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.
- 2007 - 2007 உலகக்கோப்பை துடுப்பாட்டம் (கிரிக்கெட்) போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பம்.
[தொகு] பிறப்புக்கள்
- 1733 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தவர் (இ. 1804)
- 1839 - ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (இ. 1904)
[தொகு] இறப்புக்கள்
- 1975 - ஐவோ ஆண்டிரிக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
[தொகு] சிறப்பு நாள்
- உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்