செப்டம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | செப்டம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMVIII |
செப்டம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 245வது நாளாகும். நெட்டாண்டுகளில் 246வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1666 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் 10,000 கட்டடங்கள் சேதமாயின.
- 1752 - ஐக்கிய இராச்சியத்தில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1792 - பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரத்தில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.
- 1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் புருசியப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் பிடித்தனர்.
- 1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
- 1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மேனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1990 - மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
- 1998 - சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த 229 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1969 - ஹோ சி மின், வியட்நாம் அதிபர் (பி. 1890)
- 1973 - ஜே. ஆர். ஆர். டோல்கியென், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892)
[தொகு] சிறப்பு நாள்
- வியட்நாம் - குடியரசு நாள் (1945)
- ஜேர்மனி - வெற்றி நாள் (1870, பிரான்சுடன் இடம்பெற்ற போரில்)
- திரான்ஸ்னிஸ்திரியா - விடுதலை நாள் (1990, எந்த நாட்டினாலும் இது அங்கீகரிக்கப்ப்படவில்லை)