டிசம்பர் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 346வது நாளாகும். நெட்டாண்டுகளில் 347வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1098 - சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை இரண்டாம் ஏர்பன் பாப்பரசரின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
- 1812 - ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
- 1862 - யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
- 1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது.
- 1901 - அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபவுண்ட்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.
- 1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
- 1923 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 - குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
- 1940 - இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
- 1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
- 1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
- 1979 - ரொடீசியா தனது பெயரை சிம்பாப்வேயாக மாற்றியது.
- 1984 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா என்பவர் புதிய அதிபரானார்.
- 1985 - கனடாவின் நியூபவுண்ட்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1988 - லண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
- 1991 - ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புக்கள்
- 1863 - எட்வர்ட் மண்ச், ஓவியர் (இ. 1944)
- 1927 - ராபர்ட் நாய்சு, பொறியியலாளர் (இ. 1990)
- 1949 - ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர்
- 1950 - எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு மெற்ற அமெரிக்கர்
- 1981 - யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வீரர்
[தொகு] இறப்புகள்
- 1940 - தியாகி விஸ்வநாததாஸ் நாடக நடிகரும், தேசியவாதியும் (பி. 1886)
- 2006 - இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)