ஜூன் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 180ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த தொமஸ் ஹிங்கி (Thomas Hinkey) தூக்கிலிடப்பட்டான்.
- 1881 - ஆஸ்திரியாவுக்கும் சேர்பியாவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
- 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் ஃபேர்டினண்ட், மற்றும் அவரது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
- 1919 - பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
- 1922 - ஐரிஷ் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1938 - 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் (meteorite) பென்சில்வானியாவில் சிக்கோரா என்னும் இடத்தில் வீழ்ந்தது.
- 1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
- 1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1995 - ஈழப்போர்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
- 2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.
[தொகு] பிறப்புகள்
- 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப் படுத்தியவர். (இ. 1791)
- 1907 - தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)
- 1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர் (இ. 2004)
- 1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.
[தொகு] இறப்புகள்
- 1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)