Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இந்தியப் பிரதமர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இந்தியப் பிரதமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்திய அரசின் சின்னம்
இந்திய அரசின் சின்னம்

இந்தியப் பிரதமர்: (ஆங்கிலம்: Prime Minister of India) இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இவரே மத்திய அமைச்சரவையின் தலைவராவார். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார்[1].


பிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மேலவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும் அல்லது ஆறு மாதத்திற்குள் மக்களவை\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் [2].


பொருளடக்கம்

[தொகு] பிரதமர் நியமனம்

முதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947
முதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947

பிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[3].

[தொகு] அதிகாரங்கள் மற்றும் பணிகள்

  • பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
  • பிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.
  • அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கினைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.
  • அரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.
  • பிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[4].
  • பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்றத் நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
  • முக்கிய இராணுவ விடயங்கள்.
  • பொதுப்பணிகள் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.
  • மாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.
  • முக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றதில் பதிலளித்தல்.
  • பிரதமரின் தேசிய நிவரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்: [5].

[தொகு] பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி
பிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி

பிரதமர் அலுவலக முகவரி:

சவுத் பிளக், ராய்சினா ஹில்,
புது டில்லி, இந்தியா - 110 011,
தொலைபேசி: 91-11-23012312.


இந்தியாவின் இரு முக்கிய செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு பொன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[5].

[தொகு] பிரதமரின் தேசிய நிதிகள்

[தொகு] பிரதமரின் தேசிய நிவாரண நிதி

1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்க்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].

[தொகு] பிரதமரின் தேசிய இராணுவ நிதி

இந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.

இந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[6].

[தொகு] பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்

இந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்க்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்க்கள்.
இருமுறை பிரதமர் பொருப்புப் பதவிவகித்த ஒரே பிரதமர்.
இவர் 582 நாட்க்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜேய் ஜவான், ஜேய் கிஸான் (வெள்க போர் வீரர், வெள்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளி நாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்க்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமானா நேருவைவிட வெரும் 300 நாட்க்களே குறைவு.
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.
41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவராவார்.
தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.
இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார்.
இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்: [7].

[தொகு] இந்தியப் பிரதமர்களின் பட்டியல்

எண் பெயர் படம் பதவி ஏற்றது பதவிக் காலம் முடிவு கட்சி பிறந்த ஊர்/மாநிலம்
01 ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் அலகாபாத், உத்தரப் பிரதேசம்
02* குல்சாரிலால் நந்தா மே 27, 1964 ஜூன் 9, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)
03 லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 ஜனவரி 11, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் முகல்சாரி, உத்தரப் பிரதேசம்
04* குல்சாரிலால் நந்தா ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)
05 இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்
06 மொரார்ஜி தேசாய் மார்ச் 24, 1977 ஜூலை 15, 1979 ஜனதா கட்சி பாதிலி, மும்பை
07 சரண் சிங் ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980 ஜனதா கட்சி நூர்பூர், உத்தரப் பிரதேசம்
08 இந்திரா காந்தி ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்
09 ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989 காங்கிரஸ் (I) மும்பை
10 வி. பி. சிங் டிசம்பர் 2, 1989 நவம்பர் 10, 1990 ஜனதா தல் அலகாபாத், உத்தரப் பிரதேசம்
11 சந்திரசேகர் நவம்பர் 10, 1990 ஜூன் 21, 1991 ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்
12 பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 மே 16, 1996 காங்கிரஸ் (I) கரிம்நகர், ஆந்திரப் பிரதேசம்
13 அடல் பிஹாரி வாஜ்பாய் மே 16, 1996 ஜூன் 1, 1996 பாரதிய ஜனதா கட்சி குவாலிர், மத்தியப் பிரதேசம்
14 தேவகவுடா ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997 ஜனதா தல் ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்
15 ஐ. கே. குஜரால் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998 ஜனதா தல் ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
16 அடல் பிஹாரி வாஜ்பாய் மார்ச் 19, 1998 மே 22, 2004 பாரதிய ஜனதா கட்சி குவாலிர், மத்தியப் பிரதேசம்
17 மன்மோகன் சிங் மே 22, 2004 -- இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)
  • மேற்கண்டவற்றுக்கான ஆதாரங்கள்: [8]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிகளும்

  1. இந்தியப் பிரதமர் [1]
  2. Tamil Nadu text book X std, Pg 193. (pdf)
  3. இந்திய அரசியலமைப்புச் சட்டம் [2]
  4. இந்திய திட்டக்குழு [3]
  5. 5.0 5.1 அதிகாரங்கள் மற்றும் பணிகள் [4]
  6. 6.0 6.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி [5]
  7. பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள் [6]
  8. இந்தியப் பிரதமர்கள் [7]

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com