ஜூலை 31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 31 கிரிகோரியன் ஆண்டின் 212வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 213வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.
<< | ஜூலை 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMVIII |
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.
- 1655 - ரஷ்யா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
- 1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.
- 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.
- 1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
- 1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
- 1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.
- 1992 - நேபாளத் தலைநகர் கத்மந்துவில் தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவூல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
- 2006 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1704 - கேப்ரியல் கிராமர், சுவிட்சர்லாந்து கணிதவியலாளர் (இ. 1752)
- 1874 - செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
- 1966 - ஜே. கே. ரௌலிங், ஆங்கில எழுத்தாளர்
[தொகு] இறப்புகள்
- 1805 - தீரன் சின்னமலை, குறுநில மன்னன் (பி. 1756)
- 1980 - முகமது ரபி, புகழ் பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகர். (பி. 1924)