டிசம்பர் 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349வது நாளாகும். நெட்டாண்டுகளில் 350வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.
- 1941 - உக்ரேனின் ஹார்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் அதிகாரத்தை தனதாக்கிக் கொண்டார்.
- 1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
- 1967 - அமெரிக்காவின் சில்வர் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
- 1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
- 1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
- 1995 - ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.
- 1997 - தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.
[தொகு] பிறப்புக்கள்
- 37 - நீரோ மன்னன், ரோமானியச் சக்கரவர்த்தி (இ. 68)
- 1832 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)
[தொகு] இறப்புகள்
- 1675 - ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
- 1950 - சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)
- 1966 - வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)