டிசம்பர் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 354வது நாளாகும். நெட்டாண்டுகளில் 355வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1606 - வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
- 1844 - இலங்கையில் அடிமைகளை வேலைக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
- 1915 - முதலாம் உலகப் போர்: கடைசி அவுஸ்திரேலியப் படைகள் துருக்கியின் கலிப்பொலி நகரை விட்டுக் கிளம்பியது.
- 1917 - சோவியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை "சேக்கா" அமைக்கப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா ஜப்பானியர்களின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
- 1943 - பொலிவியாவில் இராணுவப் புரட்சி நடந்தது.
- 1952 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் வாஷிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் கொல்லப்பட்டனர்.
- 1973 - ஸ்பானியப் பிரதமர் "லூயிஸ் கரேரோ பிளாங்கோ" மாட்ரிட் நகரில் கார்க்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
- 1984 - இங்கிலாந்தில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1988 - போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கைச்சாத்திடப்பட்டது.
- 1989 - பனாமாவின் அதிபர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
- 1995 - அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
- 1999 - போர்த்துக்கல் மக்காவு நாட்டை மக்கள் சீனக் குடியரசிடம் கையளித்தது.
[தொகு] பிறப்புக்கள்
- 1901 - ராபர்ட் வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)
- 1925 - மகதீர் முகமது, மலேசியாவின் முன்னாள் பிரதமர்
[தொகு] இறப்புகள்
- 1998 - அலன் லொயிட் ஹொட்ஜ்கின், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1914)