1956
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
ஆண்டுகள்: | 1953 1954 1955 - 1956 - 1957 1958 1959 |
1956 (MCMLI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 26 - 1956 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இத்தாலியில் Cortina d'Ampezzoஇல் தொடங்கின.
- மார்ச் 2 - பிரான்சிடம் இருந்து மொரோக்கோ விடுதலையை அறிவித்தது.
- மார்ச் 20 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
- மார்ச் 23 - பாகிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாமியக் குடியரசாகியது.
- ஜூன் 1 - விச்சிஸ்லாவ் மலோட்டொவ் (Vyacheslav Molotov) சோவியத் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
- ஜூன் 5 - இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராகக் காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர்.
- ஜூன் 23 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் இரண்டாவது அதிபரானார்.
- அக்டோபர் 14 - இந்திய தலித் தலைவர் அம்பேத்கார் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- அக்டோபர் 23 - ரஷ்யாவுக்கு எதிரான ஹங்கேரியப் புரட்சி தொடங்கியது.
- அக்டோபர் 26 - ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது.
- நவம்பர் 14 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
- நவம்பர் 22 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் தொடங்கின.
- டிசம்பர் 2 - பிடல் காஸ்ட்ரோவும் அவரது ஆதரவாளர்களும் கியூபாவை படகில் சென்றடைந்தனர்.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - வில்லியம் ஷொக்லி (William Bradford Shockley), ஜோன் பார்டீன் (John Bardeen), வோல்டர் பிரட்டின் (Walter Houser Brattain)
- வேதியியல் - சிரில் ஹின்ஷெல்வூட் (Cyril Norman Hinshelwood), நிக்கலாய் சிமியோனவ் (Nikolay Nikolaevich Semenov)
- மருத்துவம் - அண்ட்ரே கூர்னண்ட் (André Frédéric Cournand), வேர்ணர் ஃபோர்ஸ்மன் (Werner Forssmann), டிக்கின்சன் றிச்சர்ட்ஸ் (Dickinson W. Richards)
- இலக்கியம் - ஜுவான் ஜிமேனெஸ் (Juan Ramón Jiménez)
- அமைதி - விருது வழங்கப்படவில்லை