19ம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 18ம் நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள் 1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள் |
19ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1801 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1900 இல் முடிவடைந்தது.
[தொகு] முக்கிய நிகழ்வுகள்
- 1801: பிரித்தானியாவும், அயர்லாந்து இராச்சியமும் இணைந்தன.
- 1808-09: சுவீடனிடம் இருந்து ரஷ்யா பின்லாந்தைக் கைப்பற்றியது.
- 1810கள்-1820கள்: பல இலத்தீன் அமெரிக்க காலனித்துவ நாடுகள் ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளிடம் இருந்து விடுதலை பெற்றன.
- 1812 - இலங்கையில் உருளைக் கிழங்கு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது.
- 1818 - இலங்கையில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு முதல் தடவையாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
- 1819: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நவீன சிங்கப்பூர் நகரத்தை உருவாக்கியது.
- 1823-87: பிரித்தானியா பர்மாவைக் கைப்பற்றியது.
- 1826 - யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.
- 1830: பிரான்ஸ் அல்ஜீரியாவைக் கைப்பற்றியது.
- 1848: கம்யூனிச விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
- 1865: அமெரிக்க உள்நாட்டு போரில் ஐக்கிய அமெர்க்க மாநிலங்கள் வெற்றி.
- 1874: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
- 1880-1902: போவர் போர்.
- 1895-1896: எதியோப்பியா இத்தாலியைப் போரில் வென்றது.
- 1899-1913: பிலிப்பீன்ஸ் - ஐக்கிய அமெரிக்கா போர்.