உலக சுகாதார அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உலக சுகாதார அமைப்பு | |
வகை | ஐக்கிய நாடுகள் இன் விசேடத்துவ அமைப்பு |
---|---|
தலைமை அலுவலகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
அங்கத்துவம் | 193 அங்கத்துவ நாடுகள் |
அதிகாரப்பூர்வ மொழிகள் | அரபு, மண்டாரின், ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் language |
Director-General | மாக்ரட் சான் |
இணையத்தளம் | http://www.who.int/ |
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நோக்கம்
"உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்". [1] இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
[தொகு] உருவாக்கம்
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.[2]
[தொகு] உசாத்துணைகள்
- ↑ Constitution of the World Health Organization. World Health Organization. இணைப்பு 2007-07-18 அன்று அணுகப்பட்டது.
- ↑ Chronicle of the World Health Organization, April 1948. World Health Organization. இணைப்பு 2007-07-18 அன்று அணுகப்பட்டது.