1796
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
ஆண்டுகள்: | 1793 1794 1795 - 1796 - 1797 1798 1799 |
1796 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1796 MDCCXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1827 |
சீன நாட்காட்டி | 4492-4493 |
எபிரேய நாட்காட்டி | 5555-5556 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1851-1852 1718-1719 4897-4898 |
இரானிய நாட்காட்டி | 1174-1175 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1216-1217 |
ரூனிக் நாட்காட்டி | 2046
|
1796 (MDCCXCVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.
- மே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
- மே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.
- மே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
- ஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரிய]ப் படைகளை பசானோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
- டிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.