Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஹொங்கொங் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஹொங்கொங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

中華人民共和國香港特別行政區
Zhōnghuá Rénmín Gònghéguó Xiānggǎng Tèbié Xíngzhèngqū
சீன மக்கள் குடியரசின் ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதி
ஹொங்கொங் அல்லது ஹாங்காங் கொடி ஹொங்கொங் அல்லது ஹாங்காங் சின்னம்
குறிக்கோள்
கிடையாது
நாட்டுப்பண்
义勇军进行曲
தொண்டர்களின் அணிவகுப்பு
Location of ஹொங்கொங் அல்லது ஹாங்காங்
தலைநகரம் கிடையாது1
39°55′N 116°23′E / 39.917, 116.383
பெரிய நகரம் சா டின் மாவட்டம்
ஆட்சி மொழி(கள்) கண்டனீஸ் (சீனம்), ஆங்கிலம்
அரசு
 -  நிறைவேற்று தலைமை அதிகாரி டொனால்ட் செங் (Donald Tsang)
நிறுவப்படுதல்
 -  ஐக்கிய இராச்சியத்தின் ஆக்கிரமிப்பு சனவரி 1, 1841 
 -  ஐக்கிய இராச்சியத்தின் கொலனி பிரதேசமாக அறிவிப்பு ஆகஸ்டு 29, 1842 
 -  சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதி யூலை 1, 1997 
பரப்பளவு
 -  மொத்தம் 1,104 கிமீ² (--)
426.4 சது. மை 
 -  நீர் (%) 4.6%
மக்கள்தொகை
 -  2005 estimate 7,041,000 (97வது)
 -  2001 census 6,708,389 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $254.2 billion (40வது)
 -  தலா/ஆள்வீதம் $37,400 (2006வது)
ம.வ.சு (2004) 0.927 (உயர்) (22வது)
நாணயம் ஹொங்கொங் டாலர் (HKD)
நேர வலயம் HKT (ஒ.ச.நே.+8)
 -  கோடை (ப.சே.நே.)  (UTC+8)
இணைய குறி .hk
தொலைபேசி +852
மக்காவ்விலிருந்து 01
1வரலாற்று ரீதியாக விக்டோரியா ஹொங்கொங் பகுதியின் தலைநகராக இருந்தது. அரசு தலைமையகம் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளது.

ஹொங்கொங் அல்லது ஹாங்காங் (சீன மொழியில்: 香港, தமிழில் "வாசனைவிட்ட துறைமுகம்") இது சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள் இரண்டில் ஒன்றாகும். மற்றொன்று மக்காவ் ஆகும். இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேக பாதைகள், திகைக்க வைக்கும் மேம் பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்ட ஹொங்கொங் நாட்டை "ஆசியாவின் நகரம்" (Asia's City) என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

1841 களிற்கு முன்பு ஹொங்கொங்கின் தோற்றம்
1841 களிற்கு முன்பு ஹொங்கொங்கின் தோற்றம்

வரலாற்று ரீதியாக ஹொங்கொங் ஒரு மீனவக் கிராமமாகும். இன்று ஹொங்கொங் என்றழைக்கப்படும் தீவும், அதன் அண்மித்த தீவுத்தொகுதிகளும், கவ்லூன் நிலப்பரப்பும் மலைத்தொடர்களாகவும், மலைக்குன்றுகளாகவுமே அன்று காட்சியளித்துள்ளன. அதன் அடிவாரத்தில் ஆங்காங்கே சில மீனவக்குடில்கள் மட்டுமே இருந்துள்ளன.

இந்த மீனவக் கிராமங்கள் 1841 சனவரி 1 ம் நாள் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து 1842 ஆகஸ்ட் 29 ம் நாள் ஹொங்கொங்கை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு குடியேற்றமாக அறிமுகப்படுத்திக்கொண்டது. 1984 இல் சீனாவும் பிரித்தானியாவும் ஏற்படுத்திக் கொண்ட ஓர் உடன்படிக்கையின் படி 1997 யூலை 1 ம் திகதி பிரித்தானியா ஹொங்கொங்கை சீனாவிடம் கையளித்தது. அன்றிலிருந்து சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. இருப்பினும் கைசாத்திடப்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி 1997 லிருந்து 2047 வரையில் அதே ஐக்கிய இராச்சிய சட்டத்திட்டத்திற்கு அமைவான ஆட்சி முறையே இன்றும் தொடர்கின்றது.

[தொகு] எல்லைகள்

இதன் எல்லைகளாக பேர்ல் ஆறு டெல்டாவை கிழக்காகவும், சீனாவின் குவாங்தொங் பெருநிலப்பரப்பை வடக்காகவும், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தென் சீனக்கடலையும், 61 கிலோ மீட்டர் தொலைவில் மக்காவையும் அமைவிடமாக கொண்டுள்ளது.

[தொகு] நிலப்பரப்பு

ஹொங்கொங் மூன்று பிரதான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஹொங்கொங் தீவு பகுதியாகும். இதன் நிலப் பரப்பின் அளவு 81 சதுர கிலோ மீட்டர்களாகும். இரண்டாவது கவ்லூன் பிரதேசமாகும். இதன் நிலப் பரப்பளவு 47 சதுர கிலோ மீட்டர்களாகும். மூன்றாவது நிவ் டெரிடொரி (New Territory) பகுதி மற்றும் 262 குட்டித் தீவு தொகுதிகளையும் உள்ளடக்கியப் பிரதேசத்தின் நிலப் பரப்பளவு 976 சதுர கிலோ மீட்டர்களாகும். மொத்தத்தில் ஹொங்கொங்கின் மொத்த நிலப் பரப்பளவு 1104 சதுர கிலோ மீட்டர்களாகும். இது சீனப் பெருநாட்டின் 10000/1 நில அளவை விட குறைவானதாகும்.

[தொகு] ஆட்சிமுறை

ஒரு நாடு இரண்டு கொள்கை எனும் அடிப்படையில் ஹொங்கொங் அரசாங்கத்திற்கென (ஐக்கிய இராச்சிய ஆட்சி முறைபடி அமைந்த)தனித்துவமான அரசியல், ஆட்சி அதிகாரங்கள், சட்டத்திட்டங்கள், காவல் துறை, நாணயம், சுங்கக்கொள்கை, குடிவரவு குடியகல்வு சட்டங்கள், வெளிநாட்டு பிரதிநிதித்துவம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. இருப்பினும் இதன் வெளிவிவகார கொள்கைகள், எல்லை பாதுகாப்பு போன்றன மத்திய சீன அரசிடமே உள்ளது. குடிநீர், மின்சாரம் போன்றனவும் சீனாவினூடாகவே கிடைக்கப்படுகின்றது.

நிறைவேற்று தலைமை அதிகாரியாக டொனால்ட் செங் அவர்களே கடந்த வருடங்களாக இருக்கின்றார். (சீனம்) கண்டனிஸ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் ஆட்சி மொழிகளாக உள்ளன.

[தொகு] ஹொங்கொங் நகரங்கள்

[தொகு] ஹொங்கொங் தீவிலுள்ள நகரங்களின் பட்டியல்

சென்ட்ரல் Central

எட்மிரல்டி Admiralty

வன் சாய் Wan Chai

மிட் லெவல் Mid-Levels

கொவுசவே பே Causeway Bay

ஹெப்பி வெலே Happy Valley

சுங் வான் Sheung Wan

கென்னடி டவுன் Kennady Town

டின் ஹாவ் Tin Hau

போர்ட்ரஸ் இல் Fotress Hill

நோர்த் பொயிண்ட் North Point

குவாரி பே Quarry Bay

டயி கூ Tai Koo

சயி வான் ஹொ Sai Wan Ho

சவு கெயி வான் Shau Kei Wan

ஹெங் பா ச்சுன் Heng Fa Chuen

சயி வான் Chai Wan

[தொகு] கவுலூன் பகுதியிலுள்ள நகரங்களின் பட்டியல்

சிம் சா சுயீ Tsim Sha Tsui

யோர்டான் Jordan

யா மா டேய் Yau Ma Tei

மொங் கொக் Mong Kok

பிரின்ஸ் எட்வர்ட் Prince Adverd

சம் சுயீ போ Sam Sui Po

டய் கொக் சுயீ Tai Kok Tsui

[தொகு] தீவுகளில் உள்ள நகரங்கள்

[தொகு] ஹொங்கொங் கிராமங்கள்

[தொகு] மக்கள் தொகை

ஹொங்கொங்கின் மக்கள் தொகை 2007 ம் ஆண்டின் கணிப்பின் படி 6.94 மில்லியன்களாகும். இதில் 95% வீதமானோர் சீனர்களாவர். 5% வீதமானோரே ஏனையோர். பெரும்பான்மையானோரால் பேசப்படும் மொழி கண்டனீஸ் (சீனம்). தவிர ஆங்கிலமும் ஓரளவு பேசப்படுகின்றது. தற்போது மண்டரின் (சீனம்) மொழியும் பேசப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. தவிர அமெரிக்கர், கனடியர், ஆங்கிலேயர், ஐரோப்பியர், யப்பானியர், இந்தியர், பாக்கிஸ்தானியர், நேபாள, பிலிப்பின், இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து என பல்லினத்தவரும் உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்களும் குடியுரிமைப் பெற்றவர்களாக உள்ளனர்.

தவிர ஹொங்கொங்கிற்கு வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் ஹொங்கொங் தொழிலாளர்களாக இங்கே வந்து சேவை செய்பவர்கள் கிட்டத்தட்ட 275,000 உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 140.000 (53.11% வீதம்) பிலிப்பின்களாகும். 120,000 (43.15% வீதம்) இந்தோனிசியா பெண்களாகும். தாய்லாந்து 4,000 பேர் வரையில் இருக்கலாம். கிட்டத்தட்ட 3,500 இலங்கையர்கள், கிட்டத்தட்ட 3,500 இந்தியர்கள். ஏனைய நாட்டுப் பணிபெண்கள் 4,000 வரையிருக்கும்.

[தொகு] சமயம்

கன்பியூனிசம் மற்றும் பௌத்தம் ஆகியன பிரதான மதங்களாக இருக்கின்றது. அடுத்து கிருத்தவம் இருக்கின்றது. இஸ்லாம் மதத்தினரும் ஓரளவு இருக்கின்றனர். இந்து மத வழிப்பாட்டுத் தலங்களாக இரண்டு உள்ளது.

[தொகு] தமிழர்கள்

முதன்மைக் கட்டுரை: ஹொங்கொங் தமிழர்

விக்கிமூலத்தில் பின் வரும் தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது:

இந்த நாட்டில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழர்கள் குடியுரிமைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 10 - 20 குடும்பங்கள் மட்டுமே இலங்கையர்களாவர். மற்றோர் தமிழகத் தமிழர்களாவர். இங்கே தமிழகத் தமிழர்களால் உருவாக்கப் பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வருகின்றது.

"இந்திய இளம் நண்பர்கள் குழு" (YIFC) எனும் பெயரில் செயல் பட்டுவரும் இக்குழுவினரால் ஹொங்கொங்கில் தமிழ் மொழி ப் பாட வகுப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றது.

[தொகு] தொழில் நிமித்தம் ஹொங்கொங்கில் வாழும் தமிழர்கள்

ஹொங்கொங் நாட்டில் குடியுரிமைப் பெற்று வாழ்கின்றவர்களைத் தவிர ஹொங்கொங் வந்து தொழில் அனுமதிப் பத்திரம் பெற்று தொழில் புரிவோரில் கிட்டத்தட்ட 200 - 300 வரையான தமிழகத் தமிழர்களும் உள்ளனர். தொழில் அனுமதியற்று தொழில் புரிவோரும் 100 - 150 வரை இருக்கலாம்.

[தொகு] ஹொங்கொங்கில் இலங்கைத் தமிழர்கள்

இவற்றைத் தவிர ஹொங்கொங் நாட்டில் அகதி அந்தஸ்து க் கோரி வரும் (குறிப்பாக வடக்கு கிழக்கு) இலங்கைத் தமிழர்கள், மற்றும் முகவர்களால் ஏமாற்றப்படுகின்றவர்கள், முகவர்களால் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஹொங்கொங்கில் இறக்கிவிடப்பட்டு நிர்கதிகளாக்கப்படுகின்றவர்கள் போன்றோரும் 200 - 300 உள்ளனர். இவர்கள் ஐக்கிய அகதிகளுக்கான ஆனையத்தில் அகதி அந்தஸ்துக் கோரி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களாக உள்ளனர்.

[தொகு] அதிவேகப் பாதைகள்

[தொகு] மேம் பாலங்கள்

[தொகு] விசேட நிகழ்வுகள்

[தொகு] மக்கள் பழக்க வழக்கங்கள்

[தொகு] சட்ட திட்டங்கள்

[தொகு] வங்கிகள்

[தொகு] கல்வி

[தொகு] சுகாதரப் பிரிவு

[தொகு] காவல்துறை

[தொகு] இலஞ்ச ஊழல் தடுப்பு

[தொகு] வாடிக்கையாளர் உரிமை

[தொகு] கலை பண்பாடு, மற்றும் வினோத வைபவங்கள்

[தொகு] சுற்றுலா

[தொகு] தபால் சேவை

[தொகு] சமூக சேவை

[தொகு] அவசர சமிஞ்சைகள்

[தொகு] நாட்டின் சட்டத்திட்டம்

[தொகு] அவசர அழைப்புகளும் இலக்கங்களும்

[தொகு] உள்நாட்டு சர்வதேச அழைப்புகள்

[தொகு] வேறு அமைப்புகள்

[தொகு] போக்குவரத்து

ஹொங்கொங் பிரதான போக்குவரத்து சேவைகளில் உலகின் அதி நவீன சிறந்தப் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான நிழத்தடி சுரங்கப்பாதை தொடரூந்துச் சேவை செயல்படுகின்றது. மற்றும் பேரூந்து, சிற்றூந்து, ட்ரேம் வண்டி, மகிழூந்துச் சேவை, ஸ்டார் பெரி (வள்ளம்) படகு சேவை, தீவுகளுக்கான அதிவேக படகு சேவை, சொகுசு படகு சேவை, போன்றன சேவையில் உள்ளன.

ஹொங்கொங் KCR தொடரூந்துச் சேவை

ஹொங்கொங் MTR தொடரூந்துச் சேவை

ஹொங்கொங் LRT தொடரூந்துச் சேவை

ஹொங்கொங் பேரூந்துச் சேவை

ஹொங்கொங் சிற்றூந்துச் சேவை

ஹொங்கொங் ட்ரேம் சேவை

ஹொங்கொங் மகிழூந்து சேவை

ஸ்டார் பெறி படகு சேவை

தீவுகளுக்கான படகு சேவை

[தொகு] சில கண்டனீஸ் வார்த்தைகள்

கவ்லூனிலிருந்து ஹொங்கொங் தீவின் சுற்றுவட்டக்காட்சி.
கவ்லூனிலிருந்து ஹொங்கொங் தீவின் சுற்றுவட்டக்காட்சி.

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com