ஆகஸ்டு 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
ஆகஸ்டு 29 கிரிகோரியன் ஆண்டின் 241வது நாளாகும். நெட்டாண்டுகளில் 242வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 708 - செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
- 1658 - புரொட்டஸ்தாந்து சீரமைப்பு (reformed religion) யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக வண. டாக்டர் பால்டியஸ் (Rev Dr Baldeus) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1831 - மைக்கேல் பாரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
- 1898 - குட்இயர் டயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- 1907 - கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1910 - ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
- 1944 - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
- 1949 - சோவியத் ஒன்றியம் தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
- 1991 - சோவியத் உயர்பீடம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கியது.
- 1995 - முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் ஐரிஸ் மோனா என்ற கப்பலை விடுதலைப் புலிகள் மூழ்கடித்தனர்.
- 1996 - நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 - அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை கட்ரீனா சூறாவளி தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.
[தொகு] பிறப்புக்கள்
- 1958 - மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர்
[தொகு] இறப்புகள்
[தொகு] சிறப்பு நாள்
- இந்தியா - தேசிய விளையாட்டு நாள்