யோசப் வாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வண. பிதா. யோசப் வாஸ் (ஏப்ரல் 21, 1651 - ஜனவரி 16, 1711) இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார்.
[தொகு] யாழ்ப்பாணம் வருகை
கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.
[தொகு] கண்டிக்கு விஜயம்
1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.
[தொகு] முத்திப்பேறு
இன்று "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், ஜனவரி 25 1995 இல் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.