See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மணிப்பூர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மணிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மணிப்பூர்
படிமம்:IndiaManipur.png
உருவாக்கம் 21 ஜனவரி 1972
மொழி மணிப்புரி
சமயம் இந்து சமயம் 58%; கிறிஸ்தவம் 34%; இஸ்லாம் 7%
தலை நகரம் இம்பால்
ஆளுனர் அர்விந் தேவ்
முதலமைச்சர் ஒக்ராம் இபோபி சிங்
பரப்பளவு 22,327 கிமீ²
மக்கள்தொகை

 - மொத்தம் (2001)

 - அடர்த்தி

2,388,664

107/கிமீ²
கல்வியறிவு:
 - மொத்தம்
 - ஆண்கள்
 - பெண்கள்

68.9%
77.9%
59.7%
நகராக்கம் 23.88% (2001)
நேர வலயம் ஒ.ச.நே. +5.5
List of country calling codes 91 40

மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் ஒரு princely state ஆக 1891ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டது. மணிப்பூர் அரசியற் சட்டம், 1947, செயற்படுத்து அதிகாரமுள்ள தலைவராக மகாராஜாவையும், தெரிந்தெடுக்கப்பட்ட சட்டசபையொன்றையும் கொண்ட ஜனநாயக அரசாங்கமொன்றை நிறுவியது. அக்டோபர் 1949ல் இது இந்தியாவுடன் இணைந்த போது, சட்ட சபை கலைக்கப்பட்டது. மணிப்பூர், 1956 முதல் 1972 வரை ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது. 1972ல், ஒரு மாநிலமானது.

இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் Meiteilon அல்லது மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.

மணிப்பூர் ஒரு sensitive எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுல் செல்ல டில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலக்கட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனிமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

[தொகு] வெளியிணைப்புகள்


இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் இந்திய தேசியக் கொடி
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராகண்டம் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட்
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள்
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -