பாலூட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) என்பது தமது குட்டிக்கு பால் கொடுக்கின்ற வெப்ப இரத்த விலங்குகள் அனைத்தையும் குறிக்கும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம் இவற்றின் உடலில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
பெரும்பாலான பாலூட்டிகள் உயிருள்ள குட்டிகளை ஈனுகின்றன. மிகச்சில முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களையும் தோலின் மீது முடியையும் கொண்டிருக்கின்றன.